வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் வெளியிட்டுள்ள செய்தி

தென்கொரியாவிற்கு வேலை வாய்ப்பிற்காக செல்லும் பணியாளர்கள் வைப்பிலிட வேண்டிய பிணை கட்டணத்தை நூறு சதவீதமாக அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் பிரதி முகாமையாளர் மங்கள ரந்தெனிய இதனை தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள தகவல்கள்களின்படி,
“ தற்போது காணப்படும் 20 லட்சம் பிணை கட்டணம், 40 லட்சம் ரூபாய் வரை அதிகரிப்பது தொடர்பில் ஆராயப்படவுள்ளது.இலங்கையை சேர்ந்த பணியாளர்கள் ஒப்பந்த காலம் முடிவடைந்து சட்டவிரோதமாக கொரியாவில் தங்கியுள்ளமையை குறைப்பது இதன் நோக்கமாகும்.
தற்போது சுமார் 22 ஆயிரம் பேர் கொரியாவில் பணி புரிவதுடன், அதில் 3 ஆயிரத்து 821 பேர் அளவில் சட்டவிரோதமாக அங்கு தங்கியுள்ளனர்.இதனால் எதிர்காலத்தில் இலங்கைக்கு கிடைக்கவுள்ள கொரிய வேலை வாய்ப்பு குறையக்கூடிய அபாயம் காணப்படுகிறது.
எனவே சட்டவிரோதமாக கொரியாவில் தங்கியுள்ள இலங்கையை சேர்ந்த பணியாளர்களை துரிதமாக நாட்டுக்கு அழைத்து வருதல் மற்றும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.எதிகாலத்தில் இந்த நிலைமைய குறைப்பதற்காக பிணைக் கட்டணத்தை நூறு சதவீதமாக அதிகரிப்பது தொடர்பில் ஆராயப்பட்டு வருகின்றன.” என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply