கலிபோர்னியா ஏர்போர்ட்டில் விமான விபத்து : 4 பேர் பலி

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் கொரோனா மாநகராட்சி விமான நிலையத்தில் இருந்து சிறிய ரக விமானம் ஒன்று நேற்று 4 பயணிகளுடன் புறப்பட்டது. விமானம் உயரே எழும்பும்போது ஓடுதளத்தின் கடைசி பகுதியில் உள்ள புதருக்குள் திடீரென விழுந்தது. விழுந்த வேகத்தில் விமானம் வெடித்து தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 4 பேரும் உடல்கருகி உயிரிழந்தனர்.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விமானம் புறப்பட்டு உயரே எழும்பியபோது, கம்பி வேலியின் மீது மோதியதால் தரையில் விழுந்திருப்பதாக தீயணைப்பு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். விபத்தை நேரில் பார்த்த பைலட் ஒருவரும் இதே தகவலை கூறியிருக்கிறார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply