வலம்புரி சங்குகளை விற்க முயன்ற நால்வர் கைது

Thursday, May 15th, 2025 at 12:35 (SLT)

10 லட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்ய தயாராக இருந்த இரண்டு வலம்புரி சங்குகளுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் எல்பிட்டிய, பதுகிரிய மற்றும் ஹம்பாந்தோட்டை பகுதிகளை சேர்ந்த 23 முதல் 26 வயதுக்குட்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

தலாவாக்கலை பகுதியில் காரொன்று விபத்து

Thursday, May 15th, 2025 at 12:33 (SLT)

நுவரெலியாவிலிருந்து தலவாக்கலை சென்.கிளயார் தோட்டத்திற்கு அதிவேகமாக பயணித்த கார் ஒன்று பிரதான வீதியை விட்டு விலகி மண்மேடு ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

பல மில்லியன் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனை

Wednesday, May 14th, 2025 at 9:06 (SLT)

பல மில்லியன் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் இன்று புதன்கிழமை ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, ஒரு இலட்சத்து 73,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளன.

மேலும் வாசிக்க >>>

எதிர்வரும் 19 முதல் நுளம்பு ஒழிப்பு வாரம் பிரகடனம்

Wednesday, May 14th, 2025 at 9:02 (SLT)

சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக எதிர்வரும் 19ஆம் திகதி முதல் விசேட நுளம்பு ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்படவுள்ளது.

மேலும் வாசிக்க >>>

அம்பாறை – மகியங்கனை வீதியில் சொகுசு பஸ் விபத்து

Wednesday, May 14th, 2025 at 9:00 (SLT)

அம்பாறை – மகியங்கனை வீதியில், மகியங்கனையின் வேவத்த பகுதியில் சொகுசு பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

பயணிகள் பேருந்துகள் தொடர்பில் பொலிஸார் எடுத்துள்ள அதிரடித் தீர்மானம்

Wednesday, May 14th, 2025 at 8:57 (SLT)

தூரப்பகுதி பயணிகள் சேவையில் ஈடுபடும் பஸ்கள் விசேட சோதனை நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுமென பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. பொலிஸ் பிரிவுகளில் விசேட இடமொன்று ஒதுக்கப்பட்டு இந்த பஸ்கள் சோதனையிடப்படவுள்ளன.

மேலும் வாசிக்க >>>

இலங்கையை உலுக்கிய கோர விபத்து மீட்கப்பட்ட ஆறு மாத குழந்தையின் நிலை என்ன? விசாரணையில் வெளிவரும் தகவல்கள்

Tuesday, May 13th, 2025 at 11:11 (SLT)

கொத்மலை, ரம்பொட, கெரண்டியெஎல்ல பகுதியில் 22 பேரின் உயிரைப் பறித்த விபத்து, பேருந்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக நிகழவில்லை என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அதன்படி, பேருந்தில் அளவுக்கு மீறிய பயணிகள் பயணித்தமை மற்றும் அதிக களைப்பு காரணமாக சாரதிக்கு உறக்கம் ஏற்பட்டமை ஆகியவை விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக நுவரெலியா மாவட்ட மோட்டார் வாகனப் பரிசோதகர் ஜாலிய பண்டார தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

கொட்டாவை பகுதியில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து: 19 வயது இளம் பெண் பலி

Tuesday, May 13th, 2025 at 11:08 (SLT)

கொட்டாவ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தீப்பரவியதில் 19 வயது இளம் பெண் ஒருவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொட்டாவ, ருக்மல்கம வீதி, விஹார மாவத்தையை சேர்ந்த புடம்மினி துரஞ்சா என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

பெற்ற பிள்ளைக்கு நஞ்சு கலந்து கொடுத்த தந்தை தலைமறைவு

Tuesday, May 13th, 2025 at 11:05 (SLT)

யாழ்ப்பாணம் – இளவாலை பொலிஸ் பிரிவிலுள்ள உயரப்புலம் பகுதியில் தனது பிள்ளைக்கு உணவில் கிருமிநாசினியை கலந்து ஊட்டிய தந்தை தலைமறைவாகியுள்ளதாக இளவாலை பொலிஸார் தெரிவித்தனர். சிறுமி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகிறமாகவும் இளவாலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

குஷ் போதைப்பொருளுடன் பிரித்தானிய இளம் பெண் கைது

Tuesday, May 13th, 2025 at 11:02 (SLT)

தாய்லாந்தின் பேங்கொக் விமான நிலையத்திலிருந்து இலங்கைக்கு வந்த பிரித்தானிய இளம் பெண்ணொருவரால் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட குஷ் என்ற போதைப்பொருள் தொகை ஒன்று சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

தீயில் எரிந்து இளம் பெண் பரிதாப மரணம்

Tuesday, May 13th, 2025 at 11:00 (SLT)

கொட்டாவ, ருக்மல்கம வீதி, விஹார மாவத்தையில் உள்ள ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்த பெண்ணொருவர், தீயில் எரிந்து சந்தேகத்திற்கிடமான முறையில் மரணித்துள்ளதாக கொட்டாவ பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

வெசாக்கிற்காக அலங்கரிப்பு செய்த சிறுமி மின்சாரம் தாக்கி பலி

Monday, May 12th, 2025 at 10:55 (SLT)

மொரகஹஹேன – மில்லேவ பகுதியில் மின்சாரம் தாக்கி சிறுமி ஒருவர் உயிரிழந்தார். வெசாக் பூரணை தினத்தை முன்னிட்டு வீட்டை அலங்கரிப்பு செய்வதற்காக மின்குமிழுக்கு வீட்டின் முன் பொருத்தப்பட்ட ஹோல்டரிலிருந்து மின்சாரம் பெற முயன்றபோது, ​​குறித்த சிறுமியின் மீது மின்சாரம் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி இரங்கல்

Monday, May 12th, 2025 at 10:51 (SLT)

கொத்மலை ரம்பொடை – கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக தனது இரங்கலைத் தெரிவித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

புனிதமான வெசாக் தினத்தில் ஒன்றிணைந்து செயற்படுமாறு ஜனாதிபதி அழைப்பு

Monday, May 12th, 2025 at 10:46 (SLT)

புத்த பெருமானின் பிறப்பு, ஞானம் மற்றும் பரிநிர்வாணம் ஆகியவற்றை நினைவுகூரும் வெசாக் பௌர்ணமி தினம், உலகெங்கிலும் உள்ள பௌத்தர்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாகும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

கொத்மலை பஸ் விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சென்று பார்வையிட்ட பிரதமர்

Monday, May 12th, 2025 at 10:43 (SLT)

நுவரெலியா கொத்மலை கெரண்டி எல்ல பகுதியில் ஏற்பட்ட பஸ்விபத்தில் காயமடைந்தவர்களை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய நேற்று கம்பளை வைத்தியசாலைக்கு நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். இதன் போது அங்கு சென்ற பிரதமர் காயமடைந்தவர்களின் நலத்தினை விசாரித்ததோடு வைத்தியசாலையில் செயலாளர்களுக்கு வழங்கப்படுகின்ற சிகிச்சைகள் மற்றும் வசதிகள் குறித்தும் ஆராய்ந்தார் இதேவேளை அமைச்சர் பிமல் ராமநாயக்கவும் சென்றிருந்தார்.

மேலும் வாசிக்க >>>