இலங்கையில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Friday, April 18th, 2025 at 10:49 (SLT)

2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் இதுவரை நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 816,191 ஆக அதிகரித்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தரவுகள் தெரிவிக்கின்றன.

மேலும் வாசிக்க >>>

காலியில் உள்ள ஹோட்டலில் சாப்பிட வந்த ஒரு குழுவினர் மீது தாக்குதல்

Friday, April 18th, 2025 at 7:19 (SLT)

காலியில் உள்ள ஒரு முன்னணி ஹோட்டலுக்குச் சென்று உணவு முன்பதிவு செய்த ஒரு குழுவை கொடூரமாகத் தாக்கிய சம்பவம் தொடர்பாக காலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பல குடும்ப உறுப்பினர்கள் கொழும்பிலிருந்து காலிக்கு விடுமுறைக்காகச் சென்று இரவு உணவிற்கு குறித்த ஹோட்டலுக்குச் சென்றிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.

மேலும் வாசிக்க >>>

“சிறி தலதா வழிபாடு” இன்று முதல் ஆரம்பம்

Friday, April 18th, 2025 at 7:14 (SLT)

16 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் “சிறி தலதா வழிபாடு” 18ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு, 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 12.30 மணியளவில் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், இதில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் கலந்து கொள்ள உள்ளார்.

மேலும் வாசிக்க >>>

இன்று புனித வெள்ளி

Friday, April 18th, 2025 at 7:10 (SLT)

விண்ணில் கடவுள் அவர்! மண்ணில் அவதரித்ததால் மானிட மகனானார். பரமபிதா தொடக்கிய மீட்பு திட்டத்தின் முழுமையும் நிறைவும் அவரே! படைப்பில் ஆதி பெற்றோர் இழைத்த பாவத்தின் நீட்சியாக மனுக்குளத்தை சாபமும் பாவமும் கூறுபோட, இறைமகன் தன் புனித குருதி கொண்டு, உயர் தியாகம் செய்து மனுக்குலத்தின் பாவங்களை எல்லாம் கழுவி புனிதம் செய்த நாளே புனித வெள்ளி…

மேலும் வாசிக்க >>>

அஹுங்கல்லவில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் காயம்

Friday, April 18th, 2025 at 7:06 (SLT)

அஹுங்கல்லவில் உள்ள ஒரு பாடசாலைக்கு அருகில் முச்சக்கர வண்டியில் வந்த நபரொருவர் 28 வயதுடைய இளைஞர் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

Friday, April 18th, 2025 at 7:03 (SLT)

மேல், சப்ரகமுவ, மத்திய, தென், கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

ஆட்சியாளர்கள் அரசியலமைப்பின் பிரகாரமே செயற்பட வேண்டும்:வஜிர அபேவர்த்தன

Thursday, April 17th, 2025 at 10:36 (SLT)

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் எந்த கட்சி அதிகாரத்தை பெற்றாலும் அந்த உள்ளூராட்சி மன்றங்களை பாேஷித்து பாதுகாப்பது ஆளும் அரசாங்கத்தின் உரிமையாகும். ஆட்சியாளர்கள் அரசியலமைப்பின் பிரகாரமே செயற்பட வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

கொங்கோவில் படகு தீப்பிடித்து கவிழ்ந்து விபத்து : 50 பேர் பலி நூற்றுக்கணக்கானோர் மாயம் 

Thursday, April 17th, 2025 at 10:31 (SLT)

வடமேற்கு கொங்கோவில் படகு ஒன்று தீப்பிடித்து கவிழ்ந்ததில் குறைந்தது 50 பேர் உயிரிழந்துள்ளதோடு, நூற்றுக்கணக்கானோர் காணாமல்போயுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.இந்த விபத்து செவ்வாய்க்கிழமை (15) இரவு கொங்கோ ஆற்றில் இடம்பெற்றுள்ளது.

மேலும் வாசிக்க >>>

பாணந்துறை கடலில் நீராடிய இரு சிறுவர்கள் மாயம்

Thursday, April 17th, 2025 at 10:27 (SLT)

பாணந்துறையில் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் கடலில் நீராடச் சென்ற இரண்டு சிறுவர்கள் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். பாணந்துறை மற்றும் வத்தளை பகுதியைச் சேர்ந்த சிலர் புதன்கிழமை (16) மாலை 5.30 மணியளவில் கடலில் நீராடிக் கொண்டிருந்தபோது ஐந்து பேர் கடலலையில் அள்ளுண்டு சென்றுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

குடிநீர் தொட்டியில் விஷம் கலந்து மாணவர்களை கொல்ல முயற்சி

Thursday, April 17th, 2025 at 10:24 (SLT)

ஹைதராபாத் குடிநீர் தொட்டியில் விஷம் கலந்து அரசுப் பள்ளியில் படிக்கும் 30 மாணவர்கள் மர்ம நபர்கள் கொல்ல முயன்ற சம்பவம் தெலங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது

Thursday, April 17th, 2025 at 10:20 (SLT)

அரலுகஸ்வெவ பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 45 வயதுடைய குளியாப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைதானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

பிள்ளையான் – கம்மன்பில கூட்டணி அரசியல் சூழ்ச்சி அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

Thursday, April 17th, 2025 at 10:18 (SLT)

பிள்ளையானின் வழக்கில் சட்டத்தரணியாக உதய கம்மன்பில ஆஜராகியுள்ளார். கம்மன்பில வழக்கில் வாதாடுவதை நாட்டு மக்கள் கண்டதில்லை. ஆனால், பிள்ளையான் அவரின் சட்டத்தரணியாக தெரிவு செய்திருக்கிறார்.

மேலும் வாசிக்க >>>

தீர்வை வரி குறித்து அமெரிக்காவுடன் பேச்சு அவசியம் : ரணில்

Thursday, April 17th, 2025 at 10:15 (SLT)

அமெரிக்காவினால் விதிக்கப்பட்டுள்ள தீர்வை வரி குறித்து விதிக்கப்பட்டுள்ள மூன்று மாத தடை நீங்கும் வரை காத்திருக்காமல், இதனை அவசர நிலைமையாக கருதி உடனடியாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

யாழ் . வரும் ஜனாதிபதியிடம் வலி.வடக்கு மக்கள் விடுத்துள்ள கோரிக்கை

Wednesday, April 16th, 2025 at 10:54 (SLT)

யாழ்ப்பாணம் , வலி வடக்கு பிரதேசத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் விடுவிக்கப்பட்ட விவசாய காணிகளுக்கு கட்டுப்பாடுகள் இன்றி சுதந்திரமாக சென்று விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட அக்காணிகளை முழுமையாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதியிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

கடலில் அடித்து செல்லப்பட்ட 2 இளைஞர்களை காணவில்லை : ரஷ்ய தம்பதிகள் மீட்பு

Wednesday, April 16th, 2025 at 10:51 (SLT)

பானம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பானம பகுதி கடலில் நீந்திக் கொண்டிருந்த 2 இளைஞர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். இந்த சம்பவம் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை நடந்ததாக பானம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் வாசிக்க >>>