தந்தையை அடித்துக் கொன்ற மகன் கைது

Saturday, January 17th, 2026 at 11:40 (SLT)

மதவாச்சி, கடவத்தகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்று (16) இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் இரு பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்தார். மூத்த மகன் நடத்திய தாக்குதலினாலேயே இந்த மரணம் சம்பவித்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

ஜனாதிபதி யாழ்ப்பாணத்துக்கு பொங்கல் சாப்பிடச் செல்லும் போது பௌத்த தேரர்கள் சிறையில் சிறைசோறு உண்ணுகிறார்கள் : உதய கம்மன்பில

Saturday, January 17th, 2026 at 11:37 (SLT)

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க யாழ்ப்பாணத்துக்கு பொங்கல் சாப்பிடச் செல்லும் போது பௌத்த தேரர்கள் சிறையில் சிறைசோறு உண்ணுகிறார்கள். பலாங்கொட கஸ்ஸப்ப தேரர் உணவும் உண்ணவில்லை. அரசாங்கம் பௌத்தத்துக்கு எதிராக செயற்படுகிறதென பிவிதுறு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

உழவு இயந்திர விபத்தில் சாரதி உயிரிழப்பு

Saturday, January 17th, 2026 at 11:34 (SLT)

உழவு இயந்திரம் ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்த விபத்தில், அதன் சாரதி காயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். மடுல்சீமை – பசறை வீதியில் மாளிகாதென்ன நோக்கிச் செல்லும் கிளை வீதியின் சரிவான பகுதியொன்றில் நேற்று (16) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மேலும் வாசிக்க >>>

இந்தியாவில் இருந்து வந்த நபர் கட்டுநாயக்காவில் கைது

Saturday, January 17th, 2026 at 11:31 (SLT)

சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகள் மற்றும் பீடி தொகையுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த சந்தேகநபர் இன்று (17) அதிகாலை விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

கல்வி மறுசீரமைப்பு நிறுத்தப்படாது : பிரதமர் ஹரிணி அமரசூரிய

Saturday, January 17th, 2026 at 11:24 (SLT)

நாட்டுக்குத் தேவையான மேம்பட்ட சமூகப் பிரஜையை உருவாக்கும் கல்வி முறைமையை ஒருபோதும் நிறுத்தப் போவதில்லை என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கல்வி மறுசீரமைப்பின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து சிலாபம் கல்வி வலய அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்தும் நிகழ்வில் கலந்துகொண்டபோதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

கொழும்பில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட தமிழ் இளைஞன் : பொலிஸார் வெளியிட்ட தகவல்

Saturday, January 17th, 2026 at 11:17 (SLT)

கொழும்பு ஜிந்துபிட்டிய பகுதியில் நேற்று இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் தமிழ் இளைஞன் உயிரிழந்துள்ளார். பாதாள உலகக் கும்பல்களுக்கு இடையிலான மோதலின் முரண்பாடு என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வுட்லர் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

சுற்றுலா இலக்குகளை நிறைவேற்ற விசேட வேலைத்திட்டம்

Friday, January 16th, 2026 at 10:03 (SLT)

இந்த ஆண்டிற்கான சுற்றுலா இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்காக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை விசேட வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவாக உள்ள காலப்பகுதிகளில், இந்நாட்டிற்கு சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காக ஐரோப்பிய நாடுகளை இலக்கு வைத்து இந்த திட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளதாக அதன் தலைவர் புத்திக ஹேவாவசம் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “சூட்டி மல்லி“ உட்பட மூவர் டுபாயில் கைது

Friday, January 16th, 2026 at 9:59 (SLT)

பல்வேறு கொலை சம்பவங்கள் தொடர்பில் இலங்கை பொலிஸாரால் தேடப்பட்டு வரும் பாதாள உலக கும்பலைச் சேர்ந்த இருவரும் பெண் ஒருவரும் டுபாயில் வைத்து அந்நாட்டு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

மேலும் வாசிக்க >>>

அமைதிக்கான நோபல் பரிசை ட்ரம்பிடம் வழங்கிய மச்சாடோ

Friday, January 16th, 2026 at 9:56 (SLT)

வெனிசுலாவின் அரசியல் எதிர்காலம் தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சந்திப்பின் போது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பிடம் தமது அமைதிக்கான நோபல் பரிசை வழங்கியதாக வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

வீடொன்றில் இரு பெண்கள் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்

Friday, January 16th, 2026 at 9:52 (SLT)

அஹங்கம, தித்தகல்ல பகுதியில் வீடொன்றுக்குள் இரு பெண்கள் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இது குறித்து பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், அஹங்கம பொலிஸ் அதிகாரிகள் விரைந்து செயற்பட்டு வீட்டுக்குள் பலத்த காயங்களுடன் இருந்த இரு பெண்களையும் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

மேலும் வாசிக்க >>>

உழவர் திருநாளின் பட்டிப் பொங்கல் இன்றாகும்

Friday, January 16th, 2026 at 9:49 (SLT)

பொங்கல் பண்டிகையின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மாட்டுப் பொங்கல் இன்றாகும். இயற்கையை வழிபட்ட பிறகு மாடுகளை வழிபட்டு, அவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் நாளாக இந்த நாள் கொண்டாடப்படுகின்றது.

மேலும் வாசிக்க >>>

திலித்தின் தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி

Thursday, January 15th, 2026 at 8:39 (SLT)

உலகெங்கிலும் வாழும் இந்துக்களால் மிகுந்த பக்தியுடனும், கௌரவத்துடனும் கொண்டாடப்படும் அறுவடைத் திருவிழாவான தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு, ‘சர்வஜன அதிகாரம்’ கட்சித் தலைவர் திலித் ஜயவீர தனது வாழ்த்துச் செய்தியைப் பகிர்ந்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

“வளமான நாடு – அழகான வாழ்க்கை” : ஜனாதிபதியின் தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி

Thursday, January 15th, 2026 at 8:37 (SLT)

உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்களால் இன்று தைப்பொங்கல் திருநாள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படும் நிலையில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது விசேட வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

எமது அன்பான வாசகர்கள் அனைவருக்கும் எமது பொங்கல் நல்வாழ்த்துக்கள்

Thursday, January 15th, 2026 at 0:01 (SLT)

ரெலோ நியூஸ் வாசகர்கள் அனைவருக்கும் எமது அன்பான பொங்கல் நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்

www.telonews.com


யாழ். நகைக்கடையில் 10 கோடி ரூபா பெறுமதியான தங்கம் திருட்டு

Wednesday, January 14th, 2026 at 8:32 (SLT)

யாழ்ப்பாணம் மாநகரில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் 10 கோடி ரூபாய் பெறுமதியான, 2 கிலோ கிராம் தங்க நகைகளைத் திருடிய இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் புறநகரில் வசிக்கும் குறித்த இளம் பெண், தான் பணியாற்றிய நகைக் கடையில் சிறிது சிறிதாகத் தங்க நகைகளைத் திருடியுள்ளார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>