ஈரான் கப்பலிலிருந்து மீட்கப்பட்டவர்களை அவர்களின் தாய்நாட்டுக்கு அனுப்ப அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் : ரோஹித்த அபேகுணவர்த்தன

Tuesday, March 10th, 2026 at 8:19 (SLT)

ஈரான் கப்பலில் இருந்து மீட்கப்பட்டவர்களை அரசாங்கம் யாருடைய அழுத்தங்களுக்கும் அடிபணியாமல், சர்வதேச சட்டத்துக்கமைய அவர்களின் தாய் நாட்டுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதிய ஜனநாயக முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்த்தன தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

நாட்டின் கச்சா எண்ணெய் மையமான ‘கர்க் தீவை’ கைப்பற்ற அமெரிக்காவின் அதிரடி திட்டம்?

Tuesday, March 10th, 2026 at 8:14 (SLT)

ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் படைகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதி மையமான கர்க் தீவை (Kharg Island) கைப்பற்றுவது குறித்து அமெரிக்க நிர்வாகம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. ஈரானின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் சுமார் 90 சதவீதத்திற்கும் மேல் இந்தத் தீவு வழியாகவே நடைபெறுகிறது. எனவே, இந்தத் தீவைக் கட்டுப்படுத்துவதன் மூலம் ஈரானின் பொருளாதாரத்தை முற்றிலுமாக முடக்க முடியும் என்றும், அதன் மூலம் அந்நாட்டின் போர்ச் செலவுகளைக் கட்டுப்படுத்த முடியும் என்றும் அமெரிக்க உயர் அதிகாரிகள் கருதுகின்றனர்.

மேலும் வாசிக்க >>>

போரில் வெற்றி பெற அமெரிக்கா எவ்வளவு தூரத்திற்கும் செல்லும்:பீட் ஹெக்செத்

Monday, March 9th, 2026 at 7:49 (SLT)

ஈரான் உடனான போரில் வெற்றி பெறுவதற்கு எவ்வளவு தூரம் செல்ல வேண்டுமோ, அவ்வளவு தூரம் செல்ல அமெரிக்கா தயாராக உள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

ஈரானின் புதிய அதி உயர் தலைவர் தொடர்பான அறிவிப்பு வௌியானது

Monday, March 9th, 2026 at 7:45 (SLT)

ஈரானின் புதிய அதி உயர் தலைவராக, அயதுல்லா அலி கமேனிக்குப் பதிலாக அவருடைய மகன் மொஜ்தபா கமேனியை அந்நாட்டு நிபுணர்கள் சபை தெரிவு செய்துள்ளதாக ஈரானிய அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கையின் போது கடந்த 28 ஆம் திகதி ஈரானிய அதி உயர் தலைவரான அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.

மேலும் வாசிக்க >>>

மசகு எண்ணெய் விலை சடுதியாக அதிகரிப்பு

Monday, March 9th, 2026 at 7:43 (SLT)

மத்திய கிழக்கின் முக்கிய எரிசக்தி உற்பத்தியாளர்கள் உற்பத்தியைக் குறைத்ததைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் நேற்று மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 100 டொலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

இஸ்ரேல் மற்றும் ஜோர்டான் தளங்கள் மீது ஈரானிய ஏவுகணைத் தாக்குதல்

Monday, March 9th, 2026 at 6:44 (SLT)

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC), கடந்த மார்ச் 8, ஞாயிற்றுக்கிழமை அன்று இஸ்ரேலின் டெல் அவிவ் மற்றும் பியர்ஷேபா நகரங்களில் உள்ள இராணுவ இலக்குகள் மற்றும் ஜோர்டானில் உள்ள அல்-அஸ்ராக் (Al-Azraq) விமானப்படைத் தளம் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

ஈரானின் புதிய உச்சத் தலைவராக முஜ்தபா கமேனி

Monday, March 9th, 2026 at 6:39 (SLT)

ஈரானின் புதிய உச்சத் தலைவராக முன்னாள் உச்சத் தலைவர் அலி கமேனியின் இரண்டாவது மகனான மொஜ்தபா கமேனி அறிவிக்கப்பட்டுள்ளார். Kmஇந்தத் தீர்மானம், 88 உறுப்பினர்களைக் கொண்ட மூத்த மதத் தலைவர்கள் அடங்கிய நிபுணர் சபையினால் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

தேசத்தை வழிநடத்திய இலங்கையின் முதல் பெண் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க

Sunday, March 8th, 2026 at 9:28 (SLT)

சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க (Chandrika Bandaranaike Kumaratunga) இலங்கை வரலாற்றில் மட்டுமல்லாது, உலக அரசியலிலும் ஒரு முக்கிய ஆளுமையாவார்.இலங்கையின் அரசியலில் ஒரு பெரும் பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் பிறந்த அவர், நாட்டின் மிக உயரிய பதவிகளை அலங்கரித்தவர்.

மேலும் வாசிக்க >>>

குருநாகல் மற்றும் பாதுக்கையில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இருவர் கைது

Sunday, March 8th, 2026 at 9:22 (SLT)

நாட்டின் இருவேறு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சோதனைகளின் போது, ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இரண்டு சந்தேகநபர்களைக் கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். குருநாகல், தித்தவெல்ல எலஸ்வத்தை பகுதியில் 126 கிராம் 500 மில்லி கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

பெண்களுக்கு உரிய மரியாதையை வழங்குவதே உண்மையான அஞ்சலி:சஜித் பிரேமதாச

Sunday, March 8th, 2026 at 9:19 (SLT)

“பெண்களுக்கு உரிய மரியாதையை வழங்குவதே இந்த மகளிர் தினத்தில் அவர்களுக்குச் செய்யக்கூடிய உண்மையான அஞ்சலியாகும்” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு விடுத்துள்ள விசேட செய்தியில் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

ஜனாதிபதியின் மகளிர் தின வாழ்த்துச் செய்தி

Sunday, March 8th, 2026 at 9:16 (SLT)

இலங்கை வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாகப் பெண்கள் பாரிய மாற்றங்களை நிகழ்த்தி வரும் சூழலில், “பெண்களின் தலைமைத்துவம் – செழிப்பான தேசத்தின் பெருமை” எனும் தொனிப்பொருளின் கீழ் இவ்வாண்டு சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

சர்வதேச விவகாரங்களில் ‘ஊமை’ போல் மௌனம் காக்கும் அரசு : ரணில் விக்கிரமசிங்க

Sunday, March 8th, 2026 at 9:10 (SLT)

சர்வதேச விவகாரங்களில் தற்போதைய அரசாங்கம் ஒரு ‘ஊமையைப் போல’ மௌனம் காப்பதாகவும், ஜே.வி.பி கடந்த காலங்களில் ஏற்படுத்திய முட்டுக்கட்டைகளே இன்றைய எரிசக்தி நெருக்கடிக்கு முக்கிய காரணம் எனவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இந்த விமர்சனத்தை முன்வைத்தார்.

மேலும் வாசிக்க >>>

இன்று சர்வதேச மகளிர் தினம்

Sunday, March 8th, 2026 at 7:43 (SLT)

பெண்களின் சமூக, பொருளாதார, கலாசார மற்றும் அரசியல் ரீதியான சாதனைகளைக் கொண்டாடுவதற்கும், பாலின சமத்துவத்தை உறுதிப்படுத்துவதற்குமான சர்வதேச மகளிர் தினம் இன்று (08) உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

மேலும் வாசிக்க >>>

ஈரான் போர் உக்ரைன் மோதலை பாதிக்கும்: பின்லாந்து அதிபரின் எச்சரிக்கை

Sunday, March 8th, 2026 at 7:40 (SLT)

ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் படைகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர், உலகளாவிய பொருளாதாரத்திலும் பாதுகாப்பு அரசியலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப் எச்சரித்துள்ளார். இந்த மோதல் ரஷ்யா-உக்ரைன் போரை விட அதிக பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று அவர் கவலை தெரிவித்துள்ளார். குறிப்பாக, ஈரானுடனான போர் உலக நாடுகளின் கவனத்தை உக்ரைனிலிருந்து திசைதிருப்பும் வாய்ப்புள்ளதாகவும், இது ரஷ்யாவுக்கு மறைமுகமாகச் சாதகமான சூழலை உருவாக்கலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

ஜோர்டானில் அமெரிக்காவின் ஏவுகணை பாதுகாப்பு ரேடார் அமைப்பு மீது ஈரானின் தாக்குதல்

Sunday, March 8th, 2026 at 7:16 (SLT)

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் படைகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் எட்டாவது நாளை எட்டியுள்ள நிலையில், ஜோர்டானின் முவாஃபக் சால்டி விமானப் படைத்தளத்தில் நிலைநிறுத்தப்பட்டிருந்த அமெரிக்காவின் அதிநவீன ‘தாட்’ (THAAD) ஏவுகணை பாதுகாப்பு அமைப்பின் முக்கிய ரேடார் தொகுதியை ஈரான் படைகள் தாக்கி அழித்துள்ளன. சுமார் 300 மில்லியன் டொலர் (2,700 கோடி ரூபாய்) மதிப்பிலான இந்த AN/TPY-2 ரேடார் அமைப்பு, வான்வழி மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை அச்சுறுத்தல்களை முன்கூட்டியே கண்டறிந்து வழிநடத்துவதில் மிக முக்கியப் பங்காற்றி வந்தது. ஈரான் நடத்திய இந்தத் தாக்குதலை அமெரிக்க அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>