ஈரான் ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டம்

Wednesday, April 24th, 2024 at 10:14 (SLT)

உமா ஓயா திட்டத்தை திறந்து வைப்பதற்காக ஈரான் ஜனாதிபதி இன்று காலை இலங்கை வரும்போது விசேட பாதுகாப்பு திட்டமும் போக்குவரத்து திட்டமும் அமுல்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

உமா ஓயா திட்டம் இன்று மக்கள் பாவனைக்கு – திறந்து வைக்கும் நிகழ்வுக்காக இன்று இலங்கை வருகிறார் ஈரான் ஜனாதிபதி இப்ராஹீம் ரைசி

Wednesday, April 24th, 2024 at 10:11 (SLT)

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தை மக்கள் பாவனைக்கான கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இன்று இலங்கைக்குக்கு வருகைத் தரவுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

கல்வியை அரசியல் காற்பந்தாக மாற்ற முடியாது : ஜனாதிபதி

Wednesday, April 24th, 2024 at 10:06 (SLT)

கல்வியை அரசியல் காற்பந்தாக மாற்றிக்கொள்ளும் பட்சத்தில் நாடு தோல்வியை சந்திக்க நேரிடும் என்பதால், தனிப்பட்ட நோக்கங்களை விடுத்து, அனைவரும் ஒன்றிணைந்து கலந்துரையாடி நாட்டிற்கு பொருத்தமான கல்வி முறையொன்றை அறிமுகப்படுத்த வேண்டியது அவசியமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட அதிகாரிகளை தண்டிக்க குறைந்தபட்ச ஆர்வம் காட்டும் இலங்கை : அமெரிக்கா குற்றச்சாட்டு

Wednesday, April 24th, 2024 at 10:02 (SLT)

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளை அடையாளம் கண்டு தண்டனை வழங்குவதில் இலங்கை குறைந்தபட்ச நடவடிக்கை எடுத்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இலங்கையின் மனித உரிமைகள் நடைமுறைகள் குறித்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

இரண்டு வருடங்களில் 25 இலட்சம் இலங்கையர்கள் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர்

Wednesday, April 24th, 2024 at 9:57 (SLT)

கடந்த 2022 மற்றும் 2023 ஆகிய இரண்டு ஆண்டுகளில் 2,565,365 இலங்கையர்கள் பல்வேறு காரணங்கள் நிமித்தம் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள காலாண்டு அறிக்கைகள் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

ஜனாதிபதி கதிரைக்கு பலத்த போட்டி: இதுவரை 7 பேர் முன்மொழிவு

Wednesday, April 24th, 2024 at 9:54 (SLT)

ஜனாதிபதித் தேர்தலின் சூடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதில் போட்டியிடத் தீர்மானித்துள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.இதன்படி, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்த வேட்பாளர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

பிரதமர் மோடி மீது காவல் நிலையத்தில் புகார்

Tuesday, April 23rd, 2024 at 11:23 (SLT)

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கியது. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இறுதிக் கட்ட தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

மேலும் வாசிக்க >>>

ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து: 10 பேர் பலி மலேசியாவில் சோகம்

Tuesday, April 23rd, 2024 at 11:16 (SLT)

இரு ஹெலிகாப்டர்கள் மோதிய விபத்தில் 10 பேர் பலியான சம்பவம் மலேசியாவில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மலேசியா தலைநகர் கோலாலம்பூர் அருகே உள்ள லுமித் நகரத்தின் வின் பெரக் பகுதியில் இரு ராணுவ ஹெலிகாப்டர்கள் நடுவானில் கடற்படை ஒத்திகைக்காக பயிற்சியில் ஈடுபட்டிருந்தன.

மேலும் வாசிக்க >>>

ஈரானிய ஜனாதிபதி நாளை இலங்கையை வந்தடையவுள்ளார்

Tuesday, April 23rd, 2024 at 11:08 (SLT)

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரெய்ஸி ஒருநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு , நாளை புதன்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு இலங்கையை வந்தடையவுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான நாடாளுமன்ற விவாதத்திற்கு மட்டும் 13 கோடி செலவு

Tuesday, April 23rd, 2024 at 9:18 (SLT)

கடந்த மூன்று ஆண்டுகளில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக மட்டும் 11 விவாதங்கள் நாடாளுமன்றத்தில் நடைபெற்றுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேற்கூறிய விவாதத்துக்காக 11 நாட்கள் நடைபெற்ற கூட்டத்திற்காக 13 கோடியே இருபது இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இந்த நாட்டின் நாடாளுமன்ற வரலாற்றில் ஒரே விடயம் தொடர்பில் அதிகளவான விவாதங்கள் இடம்பெற்றமை இதுவே முதல் முறை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் வாசிக்க >>>

இலவச அரிசிக்கு பணம் அறவிட்ட கிராமசேவக உத்தியோகத்தர்

Tuesday, April 23rd, 2024 at 9:15 (SLT)

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு தேசிய அரிசி விநியோகத் திட்டத்தின் கீழ் பத்து கிலோ அரிசியை வழங்குவதற்காக ஒருவரிடமிருந்து நூறு ரூபா அறவிடப்படுவதாக திம்புலாகல மானம்பிட்டிய பிரதேசத்திலிருந்து செய்தியொன்று பதிவாகியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

சீன உளவாளிகள் என சந்தேகிக்கப்படும் மூவர் யேர்மனியில் கைது

Tuesday, April 23rd, 2024 at 9:05 (SLT)

யேர்மனியில் உளவு பார்த்ததாக மூன்று யேர்மனிக் குடிமக்களை சந்தேகத்தின் பெயரில் கைது செய்துள்ளதாக யேர்மனியின் பெடரல் சட்டவாளர் அலுவலகம் தெரிவித்தது. சீனாவின் கடல்சார் சக்தியை விரிவுபடுத்துவதற்கு பயனுள்ளதாக இருக்கும் ஆராய்ச்சி திட்டங்களில் மூவரும் ஈடுபட்டிருக்கலாம் என்று வழக்கறிஞர்கள் நம்புகின்றனர்.

மேலும் வாசிக்க >>>

மனித பாவனைக்கு உகந்ததென உறுதி செய்யப்பட்ட அரிசி மாத்திரமே பாடசாலை போஷாக்குத் திட்டத்திற்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது : ஜனாதிபதி அலுவலகத்தின் உலக உணவுத் திட்ட ஒத்துழைப்புக்கான செயலகம்

Tuesday, April 23rd, 2024 at 7:34 (SLT)

கம்பஹா பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் நியமிக்கப்பட்ட நிபுணத்துவ குழுவினால் மனித பாவனைக்கு உகந்ததென உறுதி செய்யப்பட்ட அரிசி மாத்திரமே, பாடசாலை போஷாக்குத் திட்டத்திற்காக வெயங்கொடை களஞ்சியத்திலிருந்து பகிர்ந்தளிக்கப்படுவதாக ஜனாதிபதி அலுவலகத்தின் உலக உணவுத் திட்ட ஒத்துழைப்புக்கான செயலகம் அறிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

மன்னர் சார்ல்ஸ் – கமீலாவின் திருமணம் : இளவரசர்கள் வில்லியம் – ஹரியின் நிலைப்பாடு

Tuesday, April 23rd, 2024 at 7:28 (SLT)

மன்னர் சார்லஸ் அவரது முன்னாள் காதலியான கமீலாவைத் திருமணம் செய்தமைக்கு, இளவரசர்கள் வில்லியம்(William) மற்றும் ஹரி (Harry), எதிர்ப்பு தெரிவித்ததாக வெளியான செய்திகளை அரச தரப்பு நிராகரித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தோர் பிரித்தானிய பிரதமர் மீண்டும் சூளுரை

Tuesday, April 23rd, 2024 at 7:23 (SLT)

சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தோரை ருவாண்டாவுக்கு அனுப்பியே தீருவோம் என பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் மீண்டும் சூளுரைத்துள்ளார்.ருவாண்டா திட்டத்துக்கு, நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்கள் இரண்டு ஆண்டுகள் முட்டுக்கட்டையாக இருந்ததாக சுட்டிக்காட்டிய பிரிதமர் ரிஷி,

மேலும் வாசிக்க >>>