மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட அதிகாரிகளை தண்டிக்க குறைந்தபட்ச ஆர்வம் காட்டும் இலங்கை : அமெரிக்கா குற்றச்சாட்டு

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளை அடையாளம் கண்டு தண்டனை வழங்குவதில் இலங்கை குறைந்தபட்ச நடவடிக்கை எடுத்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இலங்கையின் மனித உரிமைகள் நடைமுறைகள் குறித்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டத்திற்குப் புறம்பான கொலைகள், சித்திரவதைகள், மனிதாபிமானமற்ற அல்லது இழிவான நடத்தைகள், அரசாங்கத்தின் தண்டனை, கடுமையான மற்றும் உயிருக்கு ஆபத்தான சிறை நிலைமைகள் மற்றும் தன்னிச்சையான கைது அல்லது காவலில் வைத்தல் போன்ற குறிப்பிடத்தக்க மனித உரிமை மீறல்கள் பதிவாகியுள்ளதாக்க குறிப்பிடப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டில் அரசாங்கம் அல்லது அதன் முகவர்கள் சட்டத்திற்குப் புறம்பான கொலைகள் உட்பட தன்னிச்சையான கொலை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பல்வேறு செய்திகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு பொலிஸ் காவலில் பல மரணங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுளள்து.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் சந்தேக நபர்கள் பலரை அரசாங்கம் பிணையில் விடுவித்துள்ளதாகவும், அதே சமயம் ஓரினச்சேர்க்கையாளர்கள், மூன்றாம் பாலினம் ஆகியோரின் உரிமைகளை மதிக்கவும், அவர்களை கைது செய்து துன்புறுத்துவதை நிறுத்தவும் பொலிஸ் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, நிதிப் பற்றாக்குறையைக் காரணம் காட்டி, அரசாங்கம் உள்ளூராட்சித் தேர்தலை காலவரையின்றி ஒத்திவைத்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply