நான் தவறு செய்யாததினால் எவரும் கொல்லவோ, அடிக்கவோ முயற்சிக்க மாட்டார்கள் : மைத்திரிபால சிறிசேன

October 1st, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் முன்னாள் எம்.பிக்களின் பாதுகாப்பு மற்றும் இதர அரச சேவைகள் நிறுத்தப்பபடும் என அநுர தலைமையிலான அரசாங்கம் தெரிவித்து அதனை படிப்படியாக நடைமுறைப்படுத்தி வரும் நிலையில் இந்த பாதுகாப்பு சேவை நீக்கப்படுவது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கருத்து தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

முப்படை வீரர்களுக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவுகள் : பாதுகாப்பு அமைச்சு அறிக்கை

October 1st, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

விஷேட பிரமுகர்களின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள முப்படை வீரர்களுக்காக வழங்கப்படும் விஷேட ஊக்குவிப்பு கொடுப்பனவுகள், முழுமையாக நிறுத்தப்படவில்லை என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. விஷேட பிரமுகர்களின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள முப்படை வீரர்களுக்காக வழங்கப்பட்டு வரும் விஷேட ஊக்குவிப்பு கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டுள்ளதாக, சில ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் இரத்து

October 1st, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் அனைத்து வசதிகள் மற்றும் சிறப்புரிமைகளை மீளாய்வு செய்வதற்கு குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை நேற்று (30) அனுமதி வழங்கியுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்ற முதலாவது அமைச்சரவையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

புலமைப்பரிசில் விடைத்தாள் திருத்தும் பணிகள் இடைநிறுத்தம் : ஜனாதிபதி ஆலோசனை

October 1st, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளை இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆலோசனை வழங்கியுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஜனாதிபதி அனுரவை சந்தித்த அமெரிக்க தூதுவர் ஜூலி

October 1st, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிற்கும் இடையிலான சந்திப்பு இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது இதன்போது, இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற அநுரகுமார திசாநாயக்கவிற்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்த அமெரிக்க தூதுவர்,

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தமிழ் மக்கள் கூட்டணி தனித்து போட்டி:சி.வி விக்னேஸ்வரன்

October 1st, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

சி.வி விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழுக் கூட்டம் நேற்றைய தினம் (30) இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள சீ.வி.விக்னேஸ்வரனின் இல்லத்தில் இடம்பெற்றது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஒவ்வொரு குழந்தையையும் சமமாகப் பாதுகாத்து நடத்துங்கள்: இன்று சிறுவர் தினம்

October 1st, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

2024 ஆம் ஆண்டு உலகளாவிய சிறுவர்கள் தினத்தின் கருப்பொருள் “ஒவ்வொரு குழந்தையையும் சமமாகப் பாதுகாத்து நடத்துங்கள்.” ஒவ்வொரு குழந்தையும், இனம், மதம், அல்லது தோல் நிறம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், சமமான அக்கறையுடனும் பாதுகாப்புடனும் நடத்தப்பட வேண்டும் என்பதை இந்தத் கருப்பொருள் வலியுறுத்துகிறது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மோட்டார் சைக்கிள் விபத்துக்களில் மூவர் பலி

September 30th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மூன்று பிரதேசங்களில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்துக்களில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர். மகாதெனிய, பலாலி மற்றும் இப்பாகமுவ பிரதேசங்களில் இந்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சிறுவர் தினத்தை முன்னிட்டு யாழில் நடமாடும் சேவை

September 30th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

சிறுவர் தினத்தையொட்டி இதுவரை பிறப்புச் சான்றிதழை பதிவு செய்யாத சிறுவர்களுக்கான நடமாடும் சேவையானது, யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. யாழ்.மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை காலை 09.00 மணி தொடக்கம் பி.ப 04.00 மணி வரையில் நடைபெறவுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

யுக்திய மறுசீரமைப்புடன் விரைவில் முன்னெடுக்கப்படும் : பதில் பொலிஸ் மாஅதிபர் 

September 30th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

‘யுக்திய’ நடவடிக்கையை அமுலாக்குவதிலுள்ள குறைபாடுகளை அவதானித்து, அவற்றை சீர்செய்து, சட்டத்தின் மூலம் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கமைவாக தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்வரென பதில் பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மதுபானசாலை அனுமதி வழங்குவதற்காக 20 மில்லியன் லஞ்சம் : வசந்த சமரசிங்க

September 30th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

சில மதுபானசாலை அனுமதிகளை வழங்குவதற்காக சில ஊழல்மிக்க கலால் அதிகாரிகள் அண்மையில் 20 மில்லியன் ரூபாய் வரை கோரியுள்ளதாக தேசிய மக்கள் சக்தி செயற்பாட்டாளர் நேற்று தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இதையே தான் கோட்டாவும் செய்தார்

September 30th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் அண்மைக்கால தீர்மானங்கள், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது தேர்தலுக்குப் பின்னர் எடுத்த தீர்மானங்களை ஒத்தவை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பொது தேர்தலில் தென்னிலங்கையில் களமிறங்க தயாராகும் டக்ளஸ் அணி

September 30th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஈ.பி.டி.பி கட்சி கொழும்பிலும் போட்டியிடும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானாந்தா தெரிவித்துள்ளார். யாழ். தெல்லிப்பளையில் நேற்று டக்ளஸ் தேவானாந்தா தலைமையில் மக்கள் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சுமந்திரனின் அழைப்பு அமைவாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் ஒருபோதும் இணையமாட்டேன் : சி.வி.விக்கினேஸ்வரன்

September 30th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

சுமந்திரனின் அழைப்பு அமைவாக தான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் இணையப்போவதில்லை எனத் தெரிவித்திருக்கும் தமிழ் மக்கள் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஸ்வரன், ‘அதனை வேண்டுபவர்களின் கடந்தகால சிந்தனைகளும் நடத்தைகளும் அதற்கு அனுசரணை தருவதாக அமைந்திருந்தனவா என்பதை எமது மக்கள் சிந்திக்க வேண்டும்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மன்னார் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ளச் சென்ற பெண்ணின் உயிரைக் காப்பாற்றிய பொலிஸ் சார்ஜன்ட்

September 30th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மன்னார் போக்குவரத்து பிரிவு பொலிஸ் சார்ஜன்ட் மலலசேகர (41308) வின் துரித நடவடிக்கையின் காரணமாக மன்னார் பிரதான பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (29) காப்பாற்ற பட்டதாக தெரிய வருகிறது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button