ஹன்டா வைரஸ் பாதித்த பிரான்ஸ் நாட்டு பெண் கவலைக்கிடம்: தொற்று உறுதி
ஹன்டா வைரசால் பாதிக்கப்பட்ட பிரான்ஸ் நாட்டு பெண் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நெதர்லாந்து நாட்டை சேர்ந்த எம்.வி.ஹோண்டியாஸ் என்ற சொகுசு கப்பல் தென்அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில் இருந்து கடந்த 4ம் தேதி புறப்பட்டது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 150 சுற்றுலா பயணிகள், அன்டார்டிகா வழியாக ஆப்பிரிக்காவின் கேப் வெர்டே தீவு நாட்டுக்கு பயணித்தனர். மேலும் இந்த கப்பலில் 72 பணியாளர்கள் இருந்தனர். இந்த கப்பல் புறப்பட்ட சில தினங்களிலேயே 3 பயணிகள் ஹன்டா வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்தனர்.
இதையடுத்து நெதர்லாந்தின் டெனரிப் தீவுக்கு கப்பல் கொண்டு செல்லப்பட்டு, அங்கு பயணிகளுக்கு தீவிர பரிசோதனை நடத்தப்படுகிறது. இந்த சோதனையில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெண் பயணிக்கு ஹன்டா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் கப்பலில் இருந்து வௌியேற்றப்பட்டு தனி விமானம் மூலம் பாரிசுக்கு அழைத்து செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு செயற்கை சுவாச கருவிகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அந்த பெண்ணின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் 11 பேருக்கு செய்யப்பட்ட சோதனைகளில் 9 பேருக்கு ஹன்டா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, எம்.வி.ஹாண்டியாஸ் கப்பலில் இருந்து அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக வௌியேற்றப்படடு, கப்பல் மீண்டும் நெதர்லாந்து திரும்பியது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply