3 நாள் அரசு முறை பயணமாக சீனா சென்றார் அதிபர் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திப்பதற்காகத் தனது 3 நாள் பயணமாக நேற்று சீனாவுக்கு புறப்பட்டு சென்றார். சீன தலைநகர் பீஜிங்கில் டிரம்புக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. சீன அதிபர் ஜின் பிங்கின் அழைப்பின் பேரில் அதிபர் டிரம்ப் 3 நாள் பயணமாக அங்கு சென்றுள்ளார். தலைநகர் பீஜிங்கில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய டிரம்புக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்தப் பயணத்தின் போது, இன்று மற்றும் நாளை இரு நாட்டுத் தலைவர்களும் சர்வதேச விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். கடந்த 2025 அக்டோபரில் கொரியாவின் புசான் நகரில் நடந்த சந்திப்பிற்குப் பிறகு, டிரம்ப் மற்றும் ஜின்பிங் நேரில் சந்திப்பது இதுவே முதல்முறை.மேற்காசியா போர் அதனால் ஏற்பட்டுள்ள கச்சா எண்ணெய் தட்டுப்பாடு உள்ளிட்ட விஷயங்களில் இரு நாடுகளுக்கு இடையே அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு இடையே இந்த பயணம் அமைந்துள்ளது.
டிரம்புடன் டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க், ஆப்பிள் சிஇஓ டிம் குக் உள்ளிட்ட தொழிலதிபர்கள் அடங்கிய குழுவும் சென்றுள்ளது. இதில் இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. சீனா செல்வதற்கு முன் நிருபர்களிடம் பேசிய டிரம்ப், ஈரான் போர் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம் குறித்துப் பேசும்போது சற்று முரண்பட்ட கருத்துகளைத் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply