பலியானவர்களுக்கு 62 மில்லியன் ரூபாய் நட்டஈடு

September 28th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் 246 மில்லியன் ரூபாய் நட்டஈடு பெறப்பட்டுள்ளதாகவும், அதில் 62 மில்லியன் ரூபாய் உயிரிழந்தவர்களுக்காக வழங்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலிப பீரிஸ் தெரிவித்துள்ளார். நேற்று (27) உயர்நீதிமன்றத்தில் உண்மைகளை முன்வைத்த போதே இதை குறிப்பிட்டார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஐக்கிய மக்கள் சக்தியுடன் அமைக்கும் கூட்டணியில் இணைய மாட்டோம் : பிரசன்ன

September 28th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

நாடாளுமன்ற தேர்தலில் இணைந்துபோட்டிடுவது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசிய கட்சிகளுக்கிடையில் இடம்பெறும் கலந்துரையாடலில் நாங்கள் இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இந்தியாவில் குரங்கு அம்மை பரவல் அதிகரிப்பு

September 28th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இந்தியாவின் கேரளாவில் மற்றொருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கேரள மாநில சுகாதாரத் துறை, இந்த நோய் தொடர்பான அறிகுறியுள்ளவர்கள் சிகிச்சை எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பஸ் மோதி வயோதிபப் பெண் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழப்பு

September 28th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

பஸ் மோதி வயோதிபப் பெண் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் கொழும்பு – கண்டி வீதியில் உள்ள அம்பேபுஸ்ஸ பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது என்று வரக்காப்பொல பொலிஸார் தெரிவித்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

முன்னாள் அமைச்சர் குமார வெல்கம காலமானார்

September 28th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

முன்னாள் அமைச்சர் குமார வெல்கம தனது 74 ஆவது வயதில் காலமானார். தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானதாக அன்னாரின் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

AddThis Social Bookmark Button

26 மாதங்களுக்குள் 5,113 பில்லியன் ரூபா உள்நாட்டுக் கடன்: ரணிலின் திட்டங்கள் அம்பலம்

September 28th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 26 மாதங்களுக்குள் குறைந்த பட்சம் 5,113 பில்லியன் ரூபா உள்நாட்டுக் கடன்களை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவரை இலக்கு வைத்து தாக்குதல்: மோதல் முழுவீச்சில் தொடரும் நெதன்யாகு

September 28th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

இஸ்ரேல் – பலஸ்தீனத்துக்கு இடையிலான போர் தீவிரமடைந்து வருகின்றது. காஸாவின் மீது தீவிரமாக தாக்குதல் நடத்தி வந்த இஸ்ரேல், தற்சமயம் வடக்குப் பகுதியிலிருந்து வெளியேறிய இஸ்ரேல் மக்களை மீண்டும் அதே இடத்தில் குடியமர்த்த தீர்மானித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஜனாதிபதி அநுரவிற்கு நன்றி தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா

September 27th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கடற்றொழில் அமைச்சராக செயற்பட்டபோது தன்னால் முன்மொழியப்பட்டு அமைச்சரவையில் அனுமதிக்கப்பட்ட திட்டத்தினை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அனுமதி அளித்துள்ளமைக்கு டக்ளஸ் தேவானந்தா நன்றி தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

முன்னாள் அமைச்சர்களுக்கு காலக்கெடு விதித்துள்ள அநுர அரசு

September 27th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் தமது ஆட்சிக் காலத்தில் பயன்படுத்திய அனைத்து அரச வீடுகள் மற்றும் பங்களாக்களை உடனடியாக ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக அமைச்சு, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு எழுத்து மூலம் இன்று அறிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வடமாகாண ஆளுநராக கடமைகளை பொறுப்பேற்ற வேதநாயகன்

September 27th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

ஊழலற்ற மக்கள் சேவையை முன்னெடுப்பதற்கு புதிய ஜனாதிபதி கிடைத்தமை இறைவனின் செயல் என வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஜனாதிபதி அநுரவிற்கு அமெரிக்க ஜனாதிபதி வாழ்த்து

September 27th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அநுர குமார திசாநாயக்கவிற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பியுள்ளார். அவர் தனது X கணக்கில் இந்த செய்தியை பதிவு செய்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

உலக அளவில் புலம்பெயர்ந்தவர்களில் இந்தியர்கள் முதலிடம்: ஐ.நா அறிக்கை

September 27th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

உலக அளவில் இந்தியர்களே அதிகளவு புலம்பெயர்ந்துள்ளதாக இடம்பெயர்வு தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஜனாதிபதி அநுரகுமார முதல் நியமனத்திலேயே நம்பிக்கையை உடைத்துவிட்டார் : உதய கம்மன்பில குற்றச்சாட்டு

September 27th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் முதலாவது நியமனம் மக்களின் நம்பிக்கையை உடைத்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கட்சி தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

செத்து மடியும் பொது மக்கள் உடனடி போர் நிறுத்திற்கு அமெரிக்கா, பிரான்ஸ் அழைப்பு : இஸ்ரேல் மறுப்பு

September 27th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பல நட்பு நாடுகள் இஸ்ரேல்-லெபனான் எல்லையில் உடனடியாக 21 நாள் போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மீனவர்களுக்கு எரிபொருள் மானியத்தை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

September 26th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பின்னடைவைச் சந்தித்துள்ள மீன்பிடித் தொழிலை ஊக்குவித்து, உற்பத்திச் செலவைக் குறைப்பதற்காக எதிர்வரும் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் மீனவ சமூகத்திற்கு எரிபொருள் மானியத்தை வழங்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க திறைசேரிக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அதன்படி, ஆழ்கடல் மற்றும் நாளாந்த படகுகளுக்கு மாதாந்த அடிப்படையில் எரிபொருள் மானியம் வழங்கப்படும்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button