பாராளுமன்றத்திற்கு தீ வைக்க சென்றவர்கள் பொதுச்சொத்தை பாதுகாப்பதா? : சம்பிக்க ரணவக்க

August 25th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பாராளுமன்றத்திற்கு தீ வைப்பதாக வீதிக்கு இறங்கிய கட்சியினர், பொதுச் சொத்து பாதுகாப்பு சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கைது செய்திருப்பது நகைப்புக்குரிய விடயமாகும் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றஞ்சாட்டியுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கிழக்கில் தமிழர் இனழிப்பின் ஆரம்ப புள்ளி : அழிக்கப்பட்டடு காணாமல்போன அம்பாறை வயலூர் கிராமத்தின் 40 வருட நிறைவு

August 25th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

அம்பாறை மாவட்டத்தில் பல தமிழ் கிராமங்கள் சிங்கள ஆட்சியாளர்களால் அழிக்கப்பட்டு தமிழ் மக்கள் வாழ்ந்த இடமே இல்லாமல் போன வரிசையிலும் தமிழீழ போராட்ட வரலாற்றில் முதல் முதல் 1985- ஓகஸ்ட் 24 ம் திகதி விடுதலை இயக்கங்களுக்கும் சிங்கள பேரினவாத அரசுக்கும் இடையிலான சமாதான திம்பு பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் அப்பாவி விவசாயிகள் 40 பேர் படுகொலை செய்யப்பட்டு கிராமமே அழிக்கப்பட்டு வெளி உலகிற்கு வெளிவராது போன வரிசையிலும் தமிழர் இன அழிப்பின் ஆரம்ப புள்ளி வயலூர் கிராமம். என்பதுடன் இந்த இனஅழிப்பின் 40 வருட நினைவு தினம் 24-8-2005 ஞாயிற்றுக்கிழமை. ஆகும்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சுற்றுலாத்துறை மேம்பாடு : ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்க வர்த்தமானி பிரசுரம்

August 25th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக ஜனாதிபதி செயலணி ஒன்றை நிறுவுவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான இந்த குழுவில் 28 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கவுள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பணிப்புறக்கணிப்பை கைவிட்ட அரச வைத்திய அதிகாரிகள்

August 25th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

நாடு தழுவிய ரீதியில் இன்று (25) முன்னெடுக்கப்படவிருந்த பணிப்புறக்கணிப்பை கைவிட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. சுகாதார அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் வழங்கப்பட்ட எழுத்து மூல உறுதியை அடுத்து இந்த தொழிற்சங்க போராட்டத்தை கைவிடுவதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ரணிலின் கைது இலங்கையின் ஜனநாயகத்திற்கு கடுமையான அச்சுறுத்தல் எதிர்க்கட்சிகள் கூட்டாக கண்டனம்

August 24th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமை கவலைக்குரிய விடயமாகும் என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமை தொடர்பில் கொழும்பில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நடத்தும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூட்டில், ஒருவர் உயிரிழப்பு

August 24th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கள மாவத்தையில் இன்று (24) அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இன்று அதிகாலை 12.30 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இப்படியெல்லாம் செய்யாதீர்கள்

August 24th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மட்டக்களப்பில் தாய், தந்தையை இழந்த 18 வயது இளைஞனை தங்கவைத்து தமது பிள்ளையப் போல் வளர்த்து, படிக்கவைத்து, பராமரித்து வந்த வீட்டில் 16 பவுண் தங்க நகைகளை திருடிய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ரணில் கைது, சந்திரிக்கா கவலை

August 24th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ரணில் விக்கிரமசிங்கவின் கைது, நாட்டின் அடிப்படை ஜனநாயக நிறுவனங்களின் வலிமை குறித்து கடுமையான கவலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவுகள் ஒரு தனிநபரின் அல்லது எந்தவொரு அரசியல் கட்சிகளின் தலைவிதியையும் விட, சமூகத்தின் உரிமைகளுக்கான பிரச்சினைகளை தோற்றிவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ரணில் விக்ரமசிங்க சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி

August 23rd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

விளக்கமறியலில் வைக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்தத்தில் சீனியின் அளவு அதிகரித்ததன் காரணமாக வைத்திய ஆலோசனையின் பேரில் முன்னாள் ஜனாதிபதி சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

AddThis Social Bookmark Button

செம்மணி அநியாயங்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் : ரிஷாத் பதியுதீன்

August 23rd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

செம்மணியில் இடம்பெற்ற அநியாயங்களும் பாரிய அநியாயமாகும். அதனை யார் செய்தாலும் அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். அதேபோன்று ஹஜ் கடமையை செய்துவிட்டு திரும்பிய மக்களின் ஜனாஸாக்கள் எங்கே அடக்கப்பட்டுள்ளார்கள் என தெரியாமல் குடும்பங்கள் இன்றும் கவலையுடன் இருக்கிறார்கள். அவர்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ரணில் விக்ரமசிங்க கைது முன்கூட்டியே திட்டமிட்டது : ரவூப் ஹக்கீம்

August 23rd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்ட சம்பவம் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயலாகும். அதனாலே யூடியுப் அலைவரிசையாளர் ரணில் விக்ரமசிங்க கைதுசெய்யப்படுவார் என ஏற்கனவே அறிவித்திருந்தார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் : அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

August 23rd, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

காணிகள் விடுவிப்பு,காணாமல் போனவர்களுக்கு நீதி, தையிட்டி விகாரை பிரச்சினை உள்ளிட்ட அரசாங்கம் தமிழ் மக்களுக்கு வழங்கியுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவது உறுதியாகும் என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மத்திய தபால் பரிமாற்றகத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு

August 22nd, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

தபால் தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு இன்று (22) 5வது நாளாகவும் தொடர்கிறது. இந்த சூழலில் மத்திய தபால் பரிமாற்றத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலை

August 22nd, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (FCID) வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னிலையாகியுள்ளார். ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில், அவரது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு சென்ற பயணம் தொடர்பான விசாரணைக்காக இவர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தென் அமெரிக்க முனையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

August 22nd, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

தென் அமெரிக்காவிற்கும் அண்டார்டிகாவிற்கும் இடையிலான டிரேக் கடல் பெருவழியில் வியாழக்கிழமை (21) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவானது. நிலநடுக்கம் 7.5 ரிக்டர் அளவில் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button