பேச்சுவார்த்தை முட்டுக்கட்டையால் எரிபொருள் விலை உயர்வு விவேகமாக செயல்பட வேண்டும் ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

மேற்கு ஆசியா போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்கா-ஈரான் இடையே அமைதி பேச்சுவார்த்தை பாகிஸ்தானில் கடந்த 11ம் தேதி நடந்தது. இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அதன்பின் கடந்த 24ம் தேதி பாகிஸ்தானில் நடக்கவிருந்த 2 ம் கட்ட பேச்சுவார்த்தை திடீரென ரத்து ஆனது. மத்திய கிழக்கில் நடைபெறும் போரை முடிவுக்கு கொண்டு வந்து, முக்கியமான ஹோர்மூஸ் நீரிணையை மீண்டும் திறக்க ஈரான் முன்வைத்துள்ளது. ஆனால் அதற்குப் பதிலாக அமெரிக்கா ஈரானுக்கு விதித்த தடைகளை நீக்க வேண்டும் என்றும், இரு நாடுகளுக்கிடையிலான அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தைகள் பின்னர் நடத்தப்பட வேண்டும் என்ற திட்டத்தை ஈரான் முன்வைத்துள்ளது. இந்த நிலையில் ஈரான் விரைவில் விவேகமாகச் செயல்பட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில், துப்பாக்கியை ஏந்தியபடி இருக்கும் தனது படத்தை வெளியிட்டு, பதிவிட்டுள்ளதாவது: அணுஆயுதமற்ற ஒப்பந்தத்தில் எப்படி கையெழுத்திடுவது என்பது குறித்து அவர்களுக்குத் தெரியவில்லை. அவர்கள் விரைவில் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டும். இனியும் நல்லவராக இருக்க முடியாது என எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்கிடையே, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நேற்று கூறுகையில்,பிப்ரவரியில் போர் தொடங்கியதிலிருந்து உலகச் சந்தைகளில் எரிபொருள் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் பாகிஸ்தான் அடைந்த பொருளாதார முன்னேற்றத்திற்கு அமெரிக்க-ஈரான் போர் ஒரு கடுமையான அடியை ஏற்படுத்தியுள்ளது என்று கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply