கொழும்பு பங்குச் சந்தை வரலாறு காணத உச்சத்தில் நேற்று

February 9th, 2010 admin Posted in TELOnews No Comments »

வரலாறு காணத உச்சத்தில் நேற்றைய கொழும்பு பங்கு சந்தை சுட்டெண் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப் படுகிறது. நேற்றைய பங்கு வர்த்தகத்தின் மதிப்பு 2.58 பில்லியன் ரூபாய்.

கொழும்பு பங்கு பரிவர்த்தனை நிலைய குறிப்பின் படி, அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index) 2.23 சதவீதம் (82.65 புள்ளி) உயர்ந்து 3,789.37 புள்ளியில், மிலங்க விலைச்சுட்டி (Milanka Price Index -MPI) 2.45 சதவீதம் (104.57 புள்ளி) உயர்ந்து 4,373.75 புள்ளியில் கொழும்பு பங்குச் சந்தை நேற்றைய தினம் மூடப்பட்டுள்ளது. . Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

அரசியல் விளையாட்டும் விளையாட்டு அரசியலும்

February 3rd, 2010 admin Posted in TELOnews No Comments »

தமிழ் கூட்டமைப்பு வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் `சமஸ்டி` கோரிக்கையை அரசியல் தீர்வாக முன்வைத்து வடக்கு கிழக்கில் தேர்தலில் போட்டியிடப் போவதாக ஒரு `அரசியல் விளையாட்டை` மீண்டும் ஆரம்பித்துள்ளது. கூட்டமைப்பின் இந்த அரசியல் விளையாட்டு எவ்வளவு தூரம் நடைமுறைச் சாத்தியமானது என்பதை இந்திய உபகண்ட அரசியலின் புதிய யதார்த்தை ஓரளவு உள்வாங்கியவர்கள்கூட அனுமானிக்க முடியும். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

கஜேந்திரனின் அறிக்கையை மறுத்து சுரேஸ் பதிலடி

January 29th, 2010 admin Posted in TELOnews No Comments »

ஜனாதிபதித் தேர்தலில் யாழ். குடாநாட்டில் சுமார் 47.48 வீத வாக்களிப்பு இடம்பெற்றுள்ளதாக கூட்டமைப்பின் முத்தலைமைகளில் ஒருவரான யாழ் மாவாட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தல் தமிழர் தாயகப் பகுதிகளில் வாழும் 75 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனரென கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான செல்வராசா கஜேந்திரன் விடுத்த அறிக்கைக்கு பதிலடியாகவே சுரேஸ் மேற்படி கருத்தை வெளியிட்டுள்ளார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

தமிழ்நேஷன் இணையம் எடுத்த முடிவை கூட்டமைப்பு எடுக்குமா?

January 29th, 2010 admin Posted in TELOnews No Comments »

கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக இயங்கி வந்த தமிழ்நேஷன் (tamilnation.org) இணையம் கடந்த 25ம் திகதியுடன் தனது தளத்தினை மூடியுள்ளதாக அறிவித்துள்ளது. இதே போல் சில மாதங்களுக்கு முன் புதினம் மற்றும் தமிழ்நாதம் போன்ற இணையங்களும் தமது தளங்களை மூடின.

இந்த வரிசையில் அதிர்வு இணையமும் நேற்று முதல் சேர்ந்துள்ளது போல் உள்ளது. இதனை உறுதியாக சொல்ல முடிய வில்லை. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

சம்பந்தன் எடுத்த `முடிவு`க்கு எதிராக கஜேந்திரன் அறிக்கை

January 29th, 2010 admin Posted in TELOnews No Comments »

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிக்கும் முடிவை கூட்டமைப்பு எடுக்க முக்கிய காரணமான சம்பந்தனின் அரசியல் நிலைப்பாட்டை கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சே. கஜேந்திரன் வன்மையாக சாடியுள்ளார்.

சம்பந்தன் எடுத்த ‘முடிவு’ குறித்து சே. கஜேந்திரன் தன்னிலை விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

பாராளுமன்றம் கலைக்கப்படலாம்

January 28th, 2010 admin Posted in TELOnews No Comments »

தற்போதுள்ள இலங்கை பாராளுமன்றம் தனது ஆறு வருட  ஆயுள்காலத்தை வரும் ஏப்பிரல் மாதம் 2ம் திகதியுடன் நிறைவு செய்வதால்  புதிய பாராளுமன்றத்துக்கான தேர்தல் ஒன்று விரைவில் வரவுள்ளது.

வரும் மார்ச் மாதம் மூன்றாம் அல்லது நான்காம் வாரங்களில் புதிய பராளுமன்ற தேர்தல் வரலாமென கொழும்பு அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றன.

தற்போதுள்ள பாராளுமன்றத்தை கலைத்து புதிய பாராளுமன்றத்துக்கான மக்கள் ஆணையை கோருமாறு ஜனாதிபதி வர்த்தமானி அறிவித்தலை இன்னும் இரண்டு அல்லது மூன்று தினங்களுக்குள் வெளியிடலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

AddThis Social Bookmark Button

1,825,244 அதிகபடியான வாக்குகளால் மஹிந்த ராஜபக்ஷ தேர்தலில் வெற்றி

January 27th, 2010 admin Posted in TELOnews No Comments »

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ 1,825,244 அதிகபடியான வாக்குகளால் நேற்று இடம்பெற்ற ஆறாவது ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று இலங்கையின் எட்டாவது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளாரென தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க  அறிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணையாளர் தேர்தல் செயலகத்தில் இன்று மாலை உத்தியோக பூர்வமாக  இதனை அறிவித்தார்.

தேர்தல் இறுதி முடிவுகளின் படி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 6,015,934 (57.88%) வாக்குகளையும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா 4,173,185(40.15%) பெற்றுள்ளனர். பதியப்பட்ட மொத்த வாக்குகள் 10,495,451 .செல்லுபடியான மொத்த வாக்குகள் 10,393,613

AddThis Social Bookmark Button

வெளியான முடிவுகளில் மகிந்தவுக்கு 863,460 மேலதிக வாக்குகள்

January 27th, 2010 admin Posted in TELOnews No Comments »

இலங்கையில் நடைபெற்று முடிந்த எட்டாவது ஜனாதிபதிக்கான ஆறாவது ஜனாதிபதி தோ்தலின் இதுவரை வெளியிடப்பட்டுள்ள முடிவுகளின் படி தற்போதைய ஜனாதிபதியாகவுள்ள மகிந்த ராஜபக்ச எதிரணி வேட்பாளர் சரத் பொன்சேகாவை விட 863,460 மேலதிக வாக்குகள் பெற்று முன்னணியிலுள்ளார்.

இதன்படி சற்று நேரத்திற்கு முன்னர் வெளியிட்ட முடிவுகளின் பிரகாரம் மகிந்த ராஜபக்சவுக்கு 2,340,049 வாக்குகளும், எதிர்த்துப் போட்டியிட்ட சரத் பொன்சேகாவுக்கு 1,476,589 வாக்குகளும் கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

AddThis Social Bookmark Button

தபால் வாக்களிப்பில் மட்டு. மாவட்டத்தில் சரத்தும் திருமலை மாவட்டத்தில் மஹிந்தவும் முன்னணி

January 27th, 2010 admin Posted in TELOnews No Comments »

திருகோணமலை மாவட்டத்தின் தபால் மூல வாக்கெடுப்புகளில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் மகிந்த ராஜபக்ஷ 6,882 வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா 3,798 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மகிந்த ராஜபக்ஷ 1.491 வாக்குகளையும் சரத் பொன்சேகா 3,637 வாக்குகளையும் பெற்றுள்ளனர்

AddThis Social Bookmark Button

யாழ் மாவட்டத்தின் தபால் வாக்களிப்பில் சரத் முதலிடம்

January 27th, 2010 admin Posted in TELOnews No Comments »

சரத் பொன்சேகா 3,173 71.95%
மகிந்த ராஜபக்‌ஷ 892 20.23%
சிவாஜிலிங்கம் 263 5.96%
AddThis Social Bookmark Button

ஐந்து மாவட்டங்களின் தபால் வாக்குகளில் வெற்றிலை முன்னணி

January 27th, 2010 admin Posted in TELOnews No Comments »

இது வரை வெளிவந்த ஐந்து மாவட்டங்களின் தபால் மூல வாக்கெடுப்புகளில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் மகிந்த ராஜபக்ஷ 47,939 வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா 21,986 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

AddThis Social Bookmark Button

மூன்று மாவட்டங்களின் தபால் வாக்குகளில் மஹிந்த முன்னணி

January 27th, 2010 admin Posted in TELOnews No Comments »

மொனராகலை, இரட்னபுர மற்றும் புத்தளம் மாவட்டங்களில் தபால் மூல வாக்கெடுப்புகளில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் மகிந்த ராஜபக்ஷ 23,317 வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா 10,402 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

முதலில் வெளியான மூன்று மாவட்டங்களின் தபால்மூல வாக்கெடுப்புகளில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக விபரங்கள் தேர்தல் முடிவுகளுக்கான எமது விசேட இணையப்பக்கத்தில் காணலாம்

AddThis Social Bookmark Button

இன்றைய ஜனாதிபதி தேர்தலில் 70 வீத வாக்குகள் பதிவு

January 26th, 2010 admin Posted in TELOnews No Comments »

வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதும் இன்று நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மொத்த வாக்காளர் தொகையில் 70 விழுக்காடு வாக்காளர்கள் தமது வாக்குகளை பதிவு செய்துள்ளதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால வடக்கு கிழக்கில் 20 வீதமான பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் வாக்களித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி தேர்தலில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த சுமார் 35 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

முழுமையான விபரங்களை தேர்தல் ஆணையகத்திடம் இருந்தே எதிர்பார்க்க வேண்டியுள்ளது

AddThis Social Bookmark Button

ஜே.வி.பி. விஜித ஹெரத் உட்பட 40 பேர் வவுனியாவில் விடுவிப்பு

January 26th, 2010 admin Posted in TELOnews No Comments »

கிளிநொச்சி செல்வதற்காக வவுனியா ஊடாக சென்றபோதே ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹெரத் உட்பட அவருடன் வாகனத்தில் பயணித்த மேலும் 40 பேர் வவுனியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி குறித்து வவுனியா பொலிசாரிடம் ‘ரெலோநியூஸ்’ தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளதாக எமக்கு தெரிவித்துள்ளனர்.

AddThis Social Bookmark Button

பாரிய வன்முறைச்சம்பவங்கள் எதுவும் இல்லாமல் வாக்களிப்பு நிறைவு

January 26th, 2010 admin Posted in TELOnews No Comments »

இன்றைய ஜனாதிபதி தேர்தலில் குறிப்பிடத்தக்க பாரிய வன்முறைச்சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் வாக்களிப்பு பிற்பகல் 4 மணிக்கு சுமூகமாக முடிவுக்கு வந்தது.

வாக்குக் கணக்கெடுப்பு மாலை 6 மணிக்கு தொடங்கு மெனவும் முதலில் தபால் வாக்குகள் எண்ணப் படுமென தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ளது.  Read the rest of this entry »

AddThis Social Bookmark Button