1,825,244 அதிகபடியான வாக்குகளால் மஹிந்த ராஜபக்ஷ தேர்தலில் வெற்றி
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ 1,825,244 அதிகபடியான வாக்குகளால் நேற்று இடம்பெற்ற ஆறாவது ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று இலங்கையின் எட்டாவது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளாரென தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க அறிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணையாளர் தேர்தல் செயலகத்தில் இன்று மாலை உத்தியோக பூர்வமாக இதனை அறிவித்தார்.
தேர்தல் இறுதி முடிவுகளின் படி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 6,015,934 (57.88%) வாக்குகளையும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா 4,173,185(40.15%) பெற்றுள்ளனர். பதியப்பட்ட மொத்த வாக்குகள் 10,495,451 .செல்லுபடியான மொத்த வாக்குகள் 10,393,613
மூலம்/ஆக்கம் : TELOnewsYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply