ஜனாதிபதி தேர்தலில் கூட்டமைப்பு எடுத்த அரசியல் சார்பு நிலையை கேள்விக்கு உள்ளாக்கி அந்த முடிவை அடைய முழு மூச்சாக உழைத்த சம்பந்தரிடம் பதில் கோரும் `ஆட்சி` மாற்றமா? ‘ஆள்` மாற்றமா? எனும் தலைப்பில் துண்டுப் பிரசுரமொன்றை யாழ் மாவட்ட பாராளு மன்ற உறுப்பினர் என். ஸ்ரீகாந்தா வெளியிட்டுள்ளார்.
வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்.கே. சிவாஜிலிங்கத்தை ஆதரித்து வெளியிடப்பட்ட அந்த தேர்தல் துண்டுப் பிரசுரத்தில் கூட்டமைப்பின் தேர்தல் நிலைப்பாட்டை ஆதரிக்கும் யாழ் `உதயன்` போன்ற ஊடகங்களை `பச்சை` பொய்களை வெளியிடும் தமிழ் பத்திரிகை துறையின் பிரகிருதிகள் என காட்டமாக சாடியுள்ளார். Read the rest of this entry »















