இலங்கைக்கான தனது உயர்ஸ்தானியரை சுவீடன் திருப்பி அழைத்துள்ளது

April 28th, 2009 admin Posted in TELOnews No Comments »

பிரித்தானிய பிரதமர் அலுவலகம் இரு தினங்களுக்கு (ஏப். 26) முன்பு, பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலி பான்ட், பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பேர்னாட் கெளச்சல், மற்றும் சுவீடன் வெளிவிவகார அமைச்சர் சால்ஸ் பில்ட்ற் ஆகியோர் சிறிலங்காவுக்கான உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை மேற்கொள்ள இருப்பதாக அறிவித்திருந்தது. இந்நிலையில், பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர்கள் கொழும்பு வருவதற்கான அனுமதியை வழங்கிய இலங்கை அரசாங்கம், சுவீடன் நாட்டு வெளிவிவகார அமைச்சரின் வருகைக்கு அனுசரணை வழங்க தாமதிப்பதாக செய்திகள் வெளியாகின. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

பாரிய வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட லொறி மூலம் புலிகள் `பாதுகாப்பு வலயத்தில்` மேற்கொண்ட தற்கொலைத் தாக்குதல் முயற்சி முறியடிப்பு

April 28th, 2009 admin Posted in TELOnews No Comments »

வலைஞர்மடத்துக்கு தெற்காக புலிகளால் அமைக்கப்பட்டிருந்த பாரிய மண் அணையை உடைத்து முன்னேறிய இராணுவத்தை இலக்கு வைத்து புலிகள் இன்று (ஏப். 28) காலை லொறி ஒன்றினால் மேற்கொண்ட பாரிய தற்கொலை தாக்குதலை படையினர் முறியடித்துள்ளனர். மக்கள் பாதுகாப்பு வலயத்தில் இரட்டை வாய்க்கால் பகுதியில் இன்று காலை பாரிய வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட லொறி மூலம் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல் நடவடிக்கை ஒன்றை, அதன் இலக்கை அடைய விடாது, முன் கூட்டியே படையினர் மேற்கொண்ட தாக்குதல் மூலம் முற்றாக அழித்துள்ளனர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

பிரபாகரனின் மறைவிடத்திலிருந்து 3.5 கி.மீ அருகில் 58வது படையணி

April 28th, 2009 admin Posted in TELOnews No Comments »

பாதுகாப்பு வலயத்தில் பிரபாகரன் இன்னும்  இருப்பதாக படையினர் தெரிவிக்கின்றனர். வலைஞர் மடம் பகுதியை விடுவித்த இராணுவத்தின் 53வது, 58வது படையணிகள் தொடர்ந்து கரையாமுள்ளி வாய்க்கால் பகுதியை நோக்கி முன்னேறியுள்ளனர். தற்போது பிரபாகரனும் அவரது மிக நம்பிக்கைக்கு உரியவர்களான பொட்டு, சூசை, பானு என்போர் வெள்ளாமுள்ளி வாய்க்கால் பகுதியில் மிகப் பாதுகாப்பான பங்கருக்குள் இருப்பதாக பாதுகாப்பு வலயத்தில் இருந்து வெளியேறி வந்து இராணுவத்திடம் சரணடைந்த புலி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

புலிகளுக்கு பிரச்சார இறுவட்டு தயாரித்த அறுவர் சென்னையில் கைது

April 27th, 2009 admin Posted in TELOnews No Comments »

இந்திய அரசியல் தலைவர்களை விமர்சன எல்லைக்கு அப்பாற் சென்று மிக மோசமாக இழிவுபடுத்தும் `காணொளி இறுவட்டு`களை தயாரித்த அறுவரை சென்னை மாநகர காவல் துறை கைது செய்துள்ளது. சென்னையில் கே.கே. நகரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் புலிகளுக்கு பிரச்சார சிடிக்கள் தயாரிக்கப்படுவதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

லண்டனில் இந்திய தூதரகம் புலிகளின் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டது

April 27th, 2009 admin Posted in TELOnews No Comments »

இந்திய அரசுக்கு எதிராக சுலோகங்களை தாங்கி இன்று (ஏப். 27) காலை முதல் மத்திய லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டமொன்று தொடர்கிறது. ஆர்ப்பட்டகாரர்கள் சிலர் இந்திய உயர் ஸ்தானிகர் கட்டிடத்தினுள் பலாத்தாரமாக நுழைய முயற்சித்ததாகவும் சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கு செய்திகள் தெரிவிக்கின்றன. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

யுத்த மீறலும் யுத்த நிறுத்தமும்

April 26th, 2009 admin Posted in TELOnews No Comments »

இருபத்தி மூன்று வருடங்களுக்கு முன் இதே நாள் (ஏப். 26, 1986) புலிகள் தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தின் ஆன்ம சக்தியாக இருந்த பன்முகப் தன்மைக்கு முதல் வேட்டு வைத்தார். புலிகளின் உள்ளார்ந்த இராணுவ மேலாதிக்க வெறியின் வெளிப்படையான அரசியலே தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) மீது புலிகள் மேற்கொண்ட மிலேச்சத்தனமான தாக்குதல் நடவடிக்கையாகும். 1986 ஏப்ரல் 26 இல் புலிகளின் யாழ் மாவட்ட இராணுவக் `குண்டாஸ்` தலைவரான கிட்டு என்றழைக்கப்பட்ட சதாசிவம் கிருஸ்ணகுமார் தலைமையில் தொடங்கப்பட்ட `ரெலோ` அழித்தொழிப்பு மே 6இல் எமது அமைப்பின் தலைவர் சிறீ சபாரட்னம் கொலையுடன் மிக வெற்றிகரமாக முடிவுக்கு வந்ததாக புலிகளும் புலிகளின் ஆதரவாளர்களும் புல்லரித்துக் கொண்டனர். யாழ்ப்பாணத்தில் புலிகளின் ஆதரவாளர்கள் கிட்டு மேற்கொண்ட மகத்தான `மக்கள் பணி`க்கு கொக்கோ கோலா கொடுத்து கெளரவித்தார்கள். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

இலங்கையில் அதிக சனத்தொகையை கொண்ட மேல் மாகாணசபை தேர்தலில் ஆழும்கட்சி பெரும் வெற்றி

April 26th, 2009 Thulasi Posted in TELOnews No Comments »

இலங்கையில் அதிக சனத்தொகையினைக் கொண்டிருக்கும் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களை உள்ளடக்கிய மேல் மாகாணசபைக்காக சனிக்கிழமை இடம்பெற்ற தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு பெரும் வெற்றியீட்டியிருகிறது. தேர்தல் முடிவுகளின்படி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு 65 சதவீதமான வாக்குகளைப்பெற்று சுமார் 68 இடங்களை பெற்று வெற்றி பெற்றிருக்கிறது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

வலைஞர்மடத்தில் 23 புலி உறுப்பினர்கள் ஆயுதங்களுடன் சரண்

April 26th, 2009 admin Posted in TELOnews No Comments »

படையினர் இன்று (ஏப். 26) காலை வலைஞர்மடம் பகுதியை விடுவிக்கும் மனிதாபிமான படை நடவடிக்கை மேற்கொண்ட போது அப்பகுதியில் 23 புலி உறுப்பினர்கள் ஆயுதங்களுடன் இராணுவத்திடம் சரண் அடைந்துள்ளனர். 17 ஆண்களும் 6 பெண்களுமாக மொத்தம் 17 புலி உறுப்பினர்களை இராணுவம் சுற்றி வளைத்ததை அடுத்து அவர்கள் அனைவரும் சரணடைந்ததாக இராணுவ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. அதனை தொடர்ந்து அப்பகுதியில் இருந்த புலிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்த 300 அதிகமான பொது மக்களும் மீட்கப்பட்டுள்ளனர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

புகழ் பெற்ற `பிள்ளை பிடிகாரர்` பாப்பா சுட்டுக் கொலை

April 26th, 2009 admin Posted in TELOnews No Comments »

புலிகள் கிளிநொச்சியில் கோலோச்சிய காலத்தில் விளையாட்டுத் துறை பொறுப்பாளராக இருந்தவரும், வன்னியில் ஆயிரக்கணக்கான குடும்பங்களை காலமெல்லாம் கண்ணீர் விட்டு அழவைத்த புலிகளின் `ஆள் சேர்ப்பு` பிரிவுக்கு பொறுப்பாளராகவும் இருந்தவரும், பதினென்மங்களைத் தாண்டாத தமது பிஞ்சுகளை பிடுங்கி எடுத்துச் சென்ற போதெல்லாம் வன்னியில் வாழ்ந்த மக்கள் வயிரெரிந்து மண்ணள்ளி எறிந்து திட்டிய முதன்மை `பிள்ளை பிடிகாரர்` வேலழகன் என்றழைப்பட்ட பாப்பா தனது குடும்ப உறுப்பினர்களுடன் புதுமாத்தளன் பகுதியில் இருந்து சில தினங்களுக்கு முன் கடல் வழியாக படகு மூலம் தப்பிச் செல்ல முற்பட்ட போது சக புலிகளின் உறுப்பினர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

தமிழ்அலை உறவுப்பாலம் நிகழ்ச்சியில் ஈரோஸ் அமைப்பின் தலைவர் ராஜநாதன் பிரபாகரன் அவர்கள் கலந்துகொள்கிறார்

April 25th, 2009 Thulasi Posted in TELOnews No Comments »

கொழும்பிலிருந்து ஒலிபரப்பாகும் டான் தமிழ்ஒலி வானொலியில் பிரதி சனிக்கிழமை தோறும் இடம்பெறும் உறவுப்பாலம் நிகழ்ச்சியில்  இன்று சனிக்கிழமை 25.04.2009 ஐரோப்பிய நேரம் இரவு 10 மணிக்கு ஈரோஸ் அமைப்பின் தலைவர் ராஜநாதன் பிரபாகரன் அவர்கள் கலந்துகொள்கிறார்.

நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைக்கவேண்டிய தொலைபேசி இலக்கம்: 0033 1 48 35 32 00. டான் தமிழ்ஒலி வானொலியை ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ரிஆர்ரி தமிழ்அலை வானொலியூடாக கேட்கலாம். ஹொட்பேர்ட் சட்டலைற்றில் ஒலிபரப்பாகும் இந்த வானொலியை, http://www.trttamilalai.com/ என்ற இணையத்தளம் ஊடாகவும் கேட்கலாம்.

AddThis Social Bookmark Button

பிரபாகரன் கடல் நீருக்குள் ஓடக்கூடிய ஸ்கூட்டர் வகையான சிறியரக ‘சப்மறின்’ மூலம் தப்பி ஓடலாம் : கட்டளைத் தளபதி சவேந்திர டி சில்வா

April 24th, 2009 admin Posted in TELOnews No Comments »

முல்லைத்தீவுக்கு இன்று (ஏப். 24) விஜயம் செய்த உள்நாட்டு மற்றும் சர்வதேச பத்திரிகையாளர்கள் சிலருக்கு கருத்துத் தெரிவித்த 58வது படையணியின் கட்டளைத் தளபதி பிரிக்கேடியர் சவேந்திர டி சில்வா, பிரபாகரன் சிறியரக ‘சப்மறின்’ மூலம் யுத்த சூனியப் பிரதேசத்தில் இருந்து தப்பி ஓடக் கூடும் என்று தெரிவித்துள்ளார். பாதுகாப்பு வலயத்தில் தனது மகன் சார்ள்ஸ் அன்ரனி, புலிகளின் புலனாய்வுத் துறை பொறுப்பாளர் பொட்டு அம்மான், கடற் புலிகளின் பொறுப்பாளர் சூசை ஆகியோருடன் தற்போது இருக்கும் பிரபாகரன் கடைசிக் கந்தாயத்தில் ‘சப்மறின்’ மூலம் தப்பிச் செல்லக் கூடும். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

யேர்மனியில் சீனத் தூதரகம் புலி ஆதரவாளர்களால் தாக்கப்பட்டது

April 24th, 2009 admin Posted in TELOnews No Comments »

இலங்கையில் உடனடி `யுத்த நிறுத்தம்` கோரி யேர்மனியில் ஆர்ப்பாட்டம் செய்த புலி ஆதரவாளர்கள் சிலர் பேர்லினில் உள்ள சீனத் தூதரகம் மீது இன்று (ஏப். 24) மதியம் தாக்குதல் நடத்தி உள்ளனர். சீன அரசுக்கு எதிராக கோசங்களை எழுப்பியவாறு சீன தூதரகத்தை முற்றுகையிட்ட சுமார் நூற்றுக்கணக்கான ஜேர்மன் வாழ் புலி ஆதரவாளர்கள் தூதரக கட்டிடத்தை நோக்கி சரமாரியான முட்டைகளை எறிந்துள்ளனர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

யுத்த சூனிய பிரதேச மக்களுக்காக அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்களை புலிகள் பறித்து அவற்றை மக்களுக்கு அதிகவிலைக்கு விற்றுள்ளனர்.

April 23rd, 2009 admin Posted in TELOnews No Comments »

படையினரின் மனிதாபிமான மீட்டுப் பணி தீர்மானகரமான ஒரு கட்டத்தை நெருங்கிய போது மக்கள் பாதுகாப்புக்காக இராணுவம் கடந்த ஜனவரி ஆரம்பத்தில் ‘யுத்த சூனிய பிரதேசம்’ என சில பகுதிகளை அறிவித்தது. அப்பகுதிக்குள் வந்த பொது மக்களின் வாழ்வாதாரத்துக்கான நிவாரணப் பொருட்களையும் கப்பல் மூலம் தொடர்ந்து அனுப்பி வந்துள்ளது. அவ்வாறு பாதுகாப்பு வலயத்திலுள்ள மக்களுக்காக அனுப்பப்பட்ட அத்தியாவசிய நிவாரணப் பொருட்களை முழுமையாகப் புலிகள் பறித்து எடுத்து அவற்றை மக்களுக்கு அதிக விலைக்கு விற்றுள்ளதாகவும் அவைகள் தங்களால் வாங்கக்கூடிய விலைக்கு அப்பாற் பட்டதாகவும் இருந்ததாக அங்கிருந்து தப்பி வந்த மக்கள் சர்வதேச ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

பிரித்தானிய புலிகளின் பொறுப்பாளர் சாந்தனுக்கு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தண்டனை; பிரான்ஸ் புலிகளின் முக்கியஸ்தர் குமரன் கைது.

April 17th, 2009 admin Posted in TELOnews No Comments »

பிரித்தானிய புலிகளின் பொறுப்பாளர் சாந்தன் என்றழைக்கப்படும் அருணாச்சலம் கிருஸ்சாந்தகுமார், 52, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் குற்றவாளியென கிங்ஸ்ரன் கிரவுன் கோர்ட் இன்று (ஏப். 17) தீர்ப்பளித்துள்ளது. பிரித்தானியாவில் 2000ஆம் ஆண்டில் இருந்து தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான புலிகள் அமைப்புக்கு உதவியதாக அவர் மீது மூன்று குற்றச்சாட்டுகளை ஸ்கொட்லண்ட் யாட் பொலிசார் சுமத்தியிருந்தனர். இரண்டு குற்றங்களுக்காக இவரை குற்றவாளியாக கண்ட நீதிமன்றம் மூன்றாவது குற்றச்சாட்டு தொடர்பாக அடுத்த வாரம் தீர்மானிக்குமென தெரிகிறது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

மக்கள் பாதுகாப்புப் பிரதேசத்தில் புலிகள் ஏராளமான மிதிவெடிகள் விதைப்பு

April 17th, 2009 admin Posted in TELOnews No Comments »

முல்லைத்தீவின் கடற்கரையோரமாக அரசு அறிவித்த மக்கள் பாதுகாப்பு வலயத்துக்குள் புலிகள் ஏராளமான மிதிவெடிகள் விதைத்துள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள் காட்டி கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. யுத்த சூனிய பிரதேசத்திலுள்ள இரட்டைவாய்க்கால் சந்தியை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்குடன் பாதுகாப்பு வலயத்துக்குள் பிரவேசிப்பதற்குத் திட்டமிட்டுள்ள இராணுவத்தின் 53, 58, 58 ஆவது படைப்பிரிவுகளும் 8 ஆவது சிறப்புப் படைப்பிரிவும் அப்பகுதியில் புலிகளால் புதைக்கப்பட்டுள்ள ஏராளமான மிதிவெடிகளை அகற்றிக் கொண்டே முன்னேற வேண்டியுள்ளது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button