ஈரான் மீதான பிடியை இறுக்கும் அமெரிக்கா: சீன சுத்திகரிப்பு ஆலை மற்றும் கப்பல்கள் மீது அதிரடித் தடை
ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையே நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் ஈரானின் பொருளாதார வளர்ச்சியை முடக்கும் நோக்கில் ஒரு மிகப்பெரிய அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
ஈரானின் மிக முக்கியமான வருமான ஆதாரமான எண்ணெய் வர்த்தகத்தை குறிவைத்து, சீனாவில் உள்ள ‘ஹெங்லி பெட்ரோகெமிக்கல்’ என்ற பிரம்மாண்டமான சுத்திகரிப்பு ஆலை மற்றும் ஈரானிய எண்ணெய் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள சுமார் 40 கப்பல் நிறுவனங்கள் மீது அமெரிக்கா தற்போது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
இந்த நடவடிக்கையின் மூலம் ஈரானின் நிதி ஆதாரங்களை நசுக்கவும், அதன் மூலம் மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் மேற்கொண்டு வரும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளையும், அதன் அணுசக்தித் திட்டங்களையும் கட்டுப்படுத்த முடியும் என்று அமெரிக்க நிதித்துறை நம்புகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply