ஐக்கிய அரபு அமீரகத்திடம் வாங்கிய ரூ.32,000 கோடி கடனை பாக். திருப்பி செலுத்தியது

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செலுத்த வேண்டிய ரூ.32,000 கோடி கடனை பாகிஸ்தான் திருப்பி செலுத்தியுள்ளது. வளைகுடா நாடுகள் பாகிஸ்தானின் அந்நிய செலாவணி இருப்பு சரிவதை தடுக்க அந்நாட்டு மத்திய வங்கியில் பெரிய தொகையை டெபாசிட் செய்வது வழக்கம். அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்தும் காலம் வரும்போது,பாகிஸ்தானின் வேண்டுகோளை ஏற்று ஐக்கிய அரபு எமிரேட் (யுஏஇ)அதைத் திருப்பிப் பெறாமல் கால நீட்டிப்பு செய்துவிடும்.

ஆனால், சமீபகாலமாக யுஏஇ இந்த டெபாசிட்டுகளுக்கு நீண்டகால நீட்டிப்பு வழங்காமல், ஒவ்வொரு மாதமும் மட்டும் நீட்டிப்பு செய்யும் குறுகிய கால நடைமுறைக்கு மாறியது. இந்த ரூ.32,000 கோடி கடனில் சுமார் ரூ.4000 கோடி கடன் என்பது 1996ம் ஆண்டு காலகட்டத்தில் வாங்கப்பட்டது. வெறும் ஓராண்டு காலத்திற்காக வாங்கப்பட்ட இந்தக் கடன், கடந்த 30 ஆண்டுகளாகத் திருப்பிச் செலுத்தப்படாமல் கால நீட்டிப்பு செய்யப்பட்டு வந்தது.

ஈரானுடன் அமெரிக்கா போர் தொடுத்ததால் மேற்கு ஆசியாவில் அதிகரித்துள்ள புவிசார் அரசியல் நிச்சயமற்ற நிலைக்கு மத்தியில் தனது வைப்பு தொகைகளை உடனே திருப்பி செலுத்துமாறு யுஏஇ கோரியது. இதையடுத்து யுஏஇக்கு செலுத்த வேண்டிய ரூ.32,000 கோடியை திருப்பி செலுத்தப்பட்டதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. தனது உறுதியான நட்பு நாடான சவுதி அரேபியாவிடமிருந்து ரூ.18,000 கோடி தொகையை சமீபத்தில் பெற்ற நிலையில் இந்த அறிவிப்பை பாகிஸ்தான் மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply