அமெரிக்காவில் மட்டும் 1 லட்சத்து 58 ஆயிரம் பேர் பலி : திணறும் நாடுகள்

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.
இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 92 ஆயிரத்தை கடந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, 1 கோடியே 82 லட்சத்து 21 ஆயிரத்து 56 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவில் இருந்து 1 கோடியே 10 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். ஆனாலும், உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 6 லட்சத்து 92 ஆயிரத்து 348 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறிப்பாக வைரஸ் பாதிப்பில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவில் இதுவரை 1 லட்சத்து 58 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-
அமெரிக்கா – 1,58,365
பிரேசில் – 94,130
மெக்சிகோ – 47,472
இங்கிலாந்து – 46,201
இந்தியா – 37,364
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply