ஸ்பெயினில் அதிகரிக்கும் கொரோனா : பாதிப்பு எண்ணிக்கை 16 லட்சத்தைக் கடந்தது

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் ஸ்பெயின் 6-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், ஸ்பெயினில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 16 லட்சத்தைக் கடந்துள்ளது. அங்கு கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 43 ஆயிரத்து 131 ஆக உள்ளது என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply