முல்லைத்தீவில் வெடிப்பு சம்பவம் : எவருக்கும் பாதிப்பு இல்லை

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்குளம் கற்குவாரி பகுதியில் தனியார் ஒருவருடைய காணியில் இருந்து குண்டு ஒன்று சற்று முன்னர் வெடித்துள்ளது.
தனியார் ஒருவருடைய காணியில் இருந்து குறித்த குண்டு எவ்வாறு வெடித்தது என்பது தொடர்பாக சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் இராணுவத்தினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இருப்பினும் குறித்த குண்டு வெடிப்பு சம்பவத்தினால் எவருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரியவருகின்றது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply