ரணில் விக்ரமசிங்க மீது குற்றச்சாட்டு
நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்ற அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்கு அந்த அரசாங்கத்தின் பிரதமரும் ஐந்து அமைச்சாகளும் காரணம் என அரசியல்பழிவாங்கல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையே இவ்வாறு தெரிவித்துள்ளது.
நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க அமைச்சர்கள் மங்களசமரவீர, ராஜித சேனாரட்ண, சரத்பொன்சேகா, ரவூப் ஹக்கீம், மலிக் சமரவீர ஆகியோரே அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளிற்கு காரணம் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஜேவிபியின் தலைவர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்கிரமரட்ண உட்பட பலர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply