ஏப்ரல் 21 தாக்குதல் அறிக்கை மீதான விவாதம் நாடாளுமன்றில் இன்று

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மீதான விவாதம் நாடாளுமன்றில் இன்று இடம்பெறவுள்ளது.நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில்,கடந்த வாரம் இடம்பெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான தெரிவுக்குழு கூட்டத்தின்போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
இன்று முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 5.30 வரையில் குறித்த அறிக்கை மீதான விவாதம் இடம்பெறும் என நாடாளுமன்ற பொதுச்செயலாளர் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply