கொழும்பில் இந்தியாவின் எல்டெயார் திறப்பு

சீனாவின் கொழும்பு துணை நகரிற்கு போட்டியாக இந்திய பின்னணியில் அமைக்கப்பட்ட எல்டெயார் தொடர்மாடி குடியிருப்பு திட்டத்தின் முதலாம் கட்டம் இன்று திறக்கப்படவுள்ளது.இலங்கையின் நிர்மாணத்துறையின் புதிய அனுபவத்துடன், புதிய படைப்பாக நிர்மாணிக்கப்பட்ட கொம்பெனித்தெருவில் உள்ள எல்டெயார் தொடர்மாடி குடியிருப்பு திட்டத்தின் முதலாம் கட்டமே இன்று திறக்கப்படவுள்ளது.
இராஜாங்க அமைச்சர் நாலக்க கொடஹேவா, நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோரின் தலைமையில் இந்த திட்டம் இன்று திறந்து வைக்கப்படவுள்ளது.
68 மாடிகளுடன் நிர்மாணிக்கப்படும் எல்டெயார் தொடர்மாடி குடியிருப்பு திட்டம் 230 மீற்றர் உயரம் கொண்டதாகும். இது தவிர 4 விதமான 407 அதிசொகுசு வீடுகளும் அவற்றில் அடங்குகின்றன.
எனினும் அரச உயர்மட்ட தலைவர்கள் எவரும் திறப்பு விழாவில் பங்கெடுக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது,
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply