குட்டிப்புலி கும்பலின் தலைவர் கைது

திருகோணமலைப் பகுதியில் ‘குட்டிப்புலி’ எனும் குழுவை உருவாக்கி அதன் தலைவராக செயல்பட்டு வந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். உப்புவெளி தேவ நகர் பகுதியில் வைத்து இவர் கைகுண்டு ஒன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

வடக்கில் ஆவா குழு போன்று குட்டிப்புலி எனும் குழுவை உருவாக்கி உள்ளூர் மக்களை மிரட்டி தகாத செயல்களில் ஈடுபட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர் மற்றும் அவரது குட்டிப்புலி கும்பல் குறித்து பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply