இத்தனை இன்னல்களுக்குப் பின் மீண்டும் அழிவுப் பாதையா?
யாழ்ப்பாணம் மாநகர சபை மற்றும் வவு னியா நகர சபைத் தேர்தல்களுக்கான பிர சாரம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. களத்தில் நிற்கும் பிரதான அணிகள் தமது பிரசாரத்தை முடுக்கிவிட்டுள்ளன. இத் தேர்தல்கள் தொடர்பாக முறைப்பாடுகள் எதுவும் கிடைக்கவில்லை என்று தேர்தல் கண்காணிப்பு அமைப்பாகிய ‘பவ்ரல்’ அறி வித்திருக்கின்றது. தமிழ் மக்களின் அரசியலைப் பொறுத்த வரையில் முக்கியத்துவம் வாய்ந்த கால கட்டத்தில் இவ்விரு தேர்தல்களும் நடை பெறுகின்றன. தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டம் தவறான தலை மையின் வழிகாட்டலில் மக்களுக்குப் பாரதூரமான பாதிப்புகளை ஏற்படுத்திய பின்னணியிலேயே இத் தேர்தல்கள் நடைபெ றுகின்றன. அரசியல் உரிமைப் போராட்டத்தைத் தவறான தடத்தில் வழிநடத்தியதில் பங்காளியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இத் தேர்தலில் போட்டியிடுகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ்ப்பா ணத்தில் அதன் முதலாவது பிரசாரக் கூட் டத்தைக் கடந்த புதன்கிழமை நடத்தியது. எட்டு வருட காலமாகப் புலிகளின் தனி நாட்டு நிகழ்ச்சிநிரலை ஏற்றுச் செயற்பட் டதன் விளைவாகத் தமிழ் மக்களுக்கு நேர்ந்துள்ள இன்னல்களுக்கும் இழப்புகளுக்கும் பொறுப்பேற்கும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புதிய அரசியல் நிலைப்பாடொன்றை வெளிப்படுத்துமென எதிர் பார்த்தவர்களுக்கு இப் பிரசாரக் கூட்டம் ஏமாற்றமளிப்பதாகவே இருந்தது.
பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் ஆற்றிய உரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பழைய தடத்திலேயே தொடர்ந்தும் செல்கின்றது என்ற செய்தியையே தெரிவிக்கின்றது. “தங்களை தாங்களே ஆள வேண்டும் என்பதற்காகவே 2004இல் தமிழ் மக்கள் எங்களைத் தெரிவு செய்தார்கள்” என்றும் “மீண்டும் மக்களைக் கூட்டிப் போராட்டம் நடத்துவோம்” என்றும் பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசியிருக்கின்றார்.
2004ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் புலி களின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக நடை பெற்றது. புலிகளின் தீர்வாகிய தனிநாட்டையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள் அப்போது ஏற்றுக்கொண்டிருந்தனர். அந்தத் தேர்தலில் கூட்டமைப்பு அடைந்த வெற்றியை மக்களாணை என ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு அத் தேர்தலில் வன்முறையும் முறைகேடுகளும் மலிந்திருந்தன. எனினும், அத் தேர்தலில் கூட்டமைப்பு வேட்பாளர்கள் தனி நாட்டுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடு த்திருந்ததால் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசாவின் மேற்படி உரை தனிநாட்டையே வலியுறுத்துகின்றது என்ற முடிவுக்கு வர வேண்டியுள்ளது. 2004ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலைப் பற்றிக் குறிப்பிட்டுவிட்டு, மீண்டும் மக்களைக் கூட்டிப் போராட்டம் நடத்துவோம் என்று அவர் கூறுவது அத்தேர்தலுக்குப் பின் தனிநாட்டுக்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் மீண்டும் மேற்கொள்ளப்படவுள்ளன என்பதைச் சூசகமாகத் தெரிவிப்பது போல இருக்கின்றது.
தனிநாட்டுக் கொள்கை தமிழ் மக்களுக்கு அழிவை ஏற்படுத்தியிருக்கின்றதேயொழிய எவ்விதமான விமோசனத்தையும் தரவி ல்லை. தமிழ் மக்களின் அரசியல் உரிமை போராட்டத்தையே இக் கொள்கை சீரழி த்துவிட்டது. இன்று தமிழ் மக்களுக்கு ஏற் பட்டுள்ள இழப்புகளுக்கும் பின்னடைவுக ளுக்கும் தனிநாட்டுக் கொள்கையே கார ணம். அந்த அழிவுப் பாதையில் மீண்டும் பயணிப்பது தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரிய துரோகம்.
அதிகாரப் பகிர்வின் மூலம் தங்களைத் தாங்களே ஆளும் நிலையை உருவாக்க முடியும். நடைமுறைச் சாத்தியமான வழி யில் அதிகாரப் பகிர்வை வென்றெடுப்பதற்கான அணுகுமுறை தான் இன்றைய தேவையேயொழிய, தேர்தல் வெற்றிக்காக மக்களை உணர்ச்சிவசப்படுத்துவது அழிவுக்கே வழிவகுக்கும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply