அமெரிக்க உதவி அமைச்சர் இன்று கொழும்பு வருகிறார்

சனத்தொகை, அகதிகள் மற்றும் குடியேற்றம் தொடர்பான அமெரிக்காவின் உதவி அமைச்சர் பதவிக்கு புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் எரிக் பி.ஸ்க்வார்ட்ஸ் இன்று சனிக்கிழமை இலங்கை வரவுள்ளார். கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தினால் விடுக்கப்பட்டிருக்கும் அறிக்கையில் ஸ்க்வாட்ஸின் இலங்கை விஜயம் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அமெரிக்க உதவி அமைச்சரான ஸக்வார்ட்ஸ் இலங்கையில் தங்கியிருக்கும் காலப் பகுதியில், வடக்கில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் முகாம்களை நேரில் சென்று பார்வையிடவுள்ளதுடன், சிரேஷ்ட அரச அதிகாரிகளையும் சிவில் சமூக பிரதிநிதிகளையும் சந்தித்து பேசவிருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எரிக் பி.ஸ்க்வார்ட்ஸ் இதற்கு முன்னரும் 2005 ஆம் ஆண்டு தொடக்கம் 2007 ஆம் ஆண்டு வரை கடல்கோளின் பின்னரான மீள்கட்டுமான பணிகளுக்கான ஐ.நா.வின் பிரதி விசேட தூதராக இலங்கையுடன் பணியாற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply