இன்னொரு பேரழிவு மக்களுக்கு வேண்டாம்
பயங்கரவாதத்துக்கு எதிரான இரா ணுவ நடவடிக்கையின் விளைவாகச் சொந்த இடங்களிலிரு ந்து வெளியேறிய மக்களே இப் போது நிவாரணக் கிராமங்களில் தங்கியிருப்பவர்கள். இவர்களை அவர்களின் சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்துவதற்கான செயற்பாடுகளுக்கு அரசாங்கம் முன்னுரிமை அளிக்கின்றது. வன்னிப் பிரதேசம் புலிகளின் கட்டுப்பா ட்டிலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ள போதிலும் இடம்பெயர்ந்தவர்களை உடனடியாக அப்பகுதிகளில் குடியமர்த்து வது சாத்தியமில்லை. முழுமையாகச் சேத மடைந்திருக்கும் உட்கட்டமைப்பு வசதிக ளைச் சீராக்காமல் மக்களை அங்கு குடிய மர்த்துவது இன்னலுக்கு உள்ளாகியவர்களை துன்பத்துக்குள் தள்ளிவிடுவதாக அமைந்து விடும்.
வீதிப்போக்குவரத்து, மின்சாரம், நீர் விநியோகம் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளைப் பூர்த்தி செய்வதோடு கண்ணி வெடிகளும் அகற்றப்பட்ட பின்னரே மக் களை அங்கு குடியமர்த்த வேண்டும். அப் போது தான் அம்மக்கள் நிம்மதியான வாழ் க்கையை நடத்த முடியும். அடுத்த மாதம் முதல் வாரமளவில் மூவாயிரம் குடும்பங் களை மீளக் குடியமர்த்த முடியுமென அர சாங்கம் அறிவித்திருக்கின்றது. இதேபோல, இப்போது நிவாரணக் கிராமங்களில் தங்கி யுள்ள மக்கள் படிப்படியாக அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்தப்படவுள் ளனர்.
பெருந்தொகையான மக்கள் அகதிகள் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது ஒரு தேசியப் பிரச்சினை. இப் பிரச்சினையில் அரசாங்கமோ எதிர்க்கட்சியோ அல்லது வேறு அரசியல் கட்சிகளோ அரசியல் லாபம் தேடுவதற்கு முனையக் கூடாது.
மக்களை மீள் குடியமர்த்தும் பணிக்குச் சிறி தளவாவது பங்களிப்புச் செய்ய முடியுமா னால் அதைச் செய்ய வேண்டும். வெறு மனே விமர்சனத்துடன் நின்றுவிடுவது இப் பிரச்சினை தொடர்பான தேசியப் பொறு ப்பை நிறைவேற்றுவதாகாது. இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற் றம் பற்றி விமர்சனம் செய்யும் பல அரசி யல் கட்சிகள் அந்த விமர்சனத்துடன் நின்று விடுகின்றன. அதற்கு அப்பால் சென்று மீள்குடியேற்ற முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை.
வன்னியிலிருந்து மக்கள் இடம்பெயர நேர்ந்ததற்கும் அதற்கு முன் வேறு இடங்களிலிருந்து மக்கள் இடம்பெ யர்ந்ததற்கும் நதிமூலத்தைத் தேடுவதானால் அது தேசிய இனப் பிரச்சினையாகவே இருக்கும். தேசிய இனப் பிரச்சினையில் மாறுபட்ட நிலைப்பாடுகளைக் கொண்டு ள்ள அரசியல் கட்சிகள் மீள் குடியேற்றம் தொடர்பாக ஒரே குரலில் விமர்சனம் செய் வதை அவதானிக்க முடிகின்றது.
தேசிய இனப் பிரச்சினையின் அரசியல் தீர்வு முய ற்சிக்கு எவ்வித பங்களிப்பும் செய்யாமல் ஓரத்தில் ஒதுங்கியிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியும் விமர்சிக்கின்றது. இனப் பிரச்சி னைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு எதி ராக ஆக்ரோஷக் குரலெழுப்பும் மக்கள் விடு தலை முன்னணியும் விமர்சிக்கின்றது. நடை முறைச் சாத்தியமற்றதும் யதார்த்தத்துக்கு முரணானதுமான தனிநாட்டு நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்பட்டதன் மூலம், தமிழ் மக்கள் அகதிகளாகும் நிலையைத் தோற்று வித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் விம ர்சிக்கின்றது.
இக் கட்சிகளின் விமர்சனங்கள் எவ்வா றானவையாக இருப்பினும், மக்கள் இடம் பெயர்வதும் அகதிகளாகுவதுமான நிலை மீண்டும் ஏற்படாதிருப்பதை உறுதிப்படுத்த வேண்டிய தார்மீகக் கடப்பாடு எல்லா அரசியல் கட்சிகளுக்கும் உண்டு.
இவற் றின் விமர்சனங்கள் பற்றிய நம்பகத்தன்மை யும் இக் கடப்பாட்டை நிறைவேற்றுவதி லேயே தங்கியுள்ளது. இனப் பிரச்சினையின் அரசியல் தீர்வுக் குக் குந்தகமாகச் செயற்படாதிருப்பதும் நடை முறைச் சாத்தியமற்ற கோரிக்கைகளை வலியுறுத்திக் குட்டை குழப்பாதிருப்பதும் சமகால யதார்த்தத்துடன் ஒட்டியதாகத் தீர்வு முயற்சியை முன்னெடுத்துச் செல்வது மான அணுகுமுறையே இன்றைய அவல நிலை மீண்டும் ஏற்படாதிருப்பதை உறுதி ப்படுத்துவதற்குத் தேவையானது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply