நாணய நிதியத்தின் கடனுதவி வடமாகாண மீள்குடியேற்றம், அபிவிருத்தியை மேலும் விரைவுபடுத்தும்
சர்வதேச நாணய நிதியத்திலிருந்து இலங்கைக்கு கிடைக்கும் நிதியினால் வடக்கின் மீள்குடியேற்றம், அபிவிருத்தி என்பன மேலும் விரைவுபடுத்தப்படும் என நிதி மற்றும் அரச வருவாய்த் துறை அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். அரசாங்கத்தின் பொருளாதார திட்டத்திற்கு கிடைத்த பாரிய வெற்றியாகவே இதனைக் கருதுவதாகவும் அமை ச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நேற்று வாரமஞ்சரிக்குத் தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவியுடன் இலங் கையின் அந்நிய செலாவணி அதிகரிப்பதுடன் கூடுதலான வெளிநாட்டு முதலீடுகளும் வரும் என்றும் தெரிவித்தார்.
கடனுதவியுடன் செல்மதி நிலுவைகள் வெகுவாக குறைவடைவதுடன் அந்நிய செலாவணி அதிகரிப்புடன் நிலையான பொருளாதார த்தை தக்கவைத்துக்கொள்ள முடியும் என்பதுடன் ரூபா வின் மதிப்பும் அதிகரிக்கும் என்றும் அமைச்சர் கூறினார். சர்வதேச நாணய நிதியத் தின் கடனுதவியுடன் வெளி நாட்டு முதலீடுகள் அதிகளவு உள்வாங்கப்படுவதால் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும் அமைச்சர் ரஞ்ஜித் சியம் பலாபிட்டிய மேலும் தெரிவித்தார்.
இலங்கை அரசு கோரியதைவிட அதிகளவு கடனு தவியை சர்வதேச நாயண நிதியம் வழங்க முன்வந்தமை இலங்கை அரசின் மீது கொண்டுள்ள நம்பிக்கையையே காட்டுகிறது என்றும் அவர் தெரிவித்தார். இதேவேளை, இந்தக் கடன் தொகை இலங்கைக்கு கிடைத்த பின்னர் ஐ. தே. கட்சியின் எதிர்பார்ப்புகள் பயனற்றுப் போய்விடும் என அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். ஐ. தே. கட்சி இலங்கையின் பொருளாதார நிலையை சீர்குலைக்க முயற்சிப்பதாகவும் அமைச்சர் அமுனுகம தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply