ஏ.டி.எம்.எந்திரத்தை வெடி வைத்து தகர்த்து ரூ.16 லட்சம் கொள்ளை

மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள சிம்பாலி கிராமப்பகுதியில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் அமைந்துள்ளது. நேற்று நள்ளிரவு ஏடிஎம் மையத்திற்குள் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த எந்திரத்தை வெடிபொருள் மூலம் உடைத்தனர். பின்னர் அதில் இருந்த 16 லட்சம் ரூபாய் பணத்தை அவர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

தகர்க்கப்பட்ட ஏடிஎம் எந்திர பகுதியில் அருகில் இருந் பகுதியில் அவர்கள் வீசி சென்றனர். இதை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து அருகில் உள்ள காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். அவர்கள் நடத்திய விசாரணையின் முடிவில் மூன்று கொள்ளையர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருந்தது தெரிய வந்துள்ளது.

அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் மூன்று முறை இதேபோன்று ஏடிஎம் எந்திரத்தை வெடி வைத்து உடைத்து பணத்தை கொள்ளையடிக்கும் சம்பவங்கள் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply