பூநகரி பிரதேச சபைக்கு புதிய தவிசாளர் தேர்வு செய்யப்பட்டார்

பூநகரி பிரதேச சபையின் புதிய தவிசாளராக சி.சிறிரஞ்சன் தொரிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டுள்ளது.பூநகரிப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் பதவியிழந்த நிலையில் புதிதாக ஒருவரின் பெயரை கட்சி பரிந்துரைத்தது. இதற்கமைய முழங்காவில் வட்டார உறுப்பினரும் முழங்காவில் தேசிய பாடசாலையின் பிரதி அதிபருமான சி.சிறிரஞ்சன் தற்போது புதிய தவிசாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் தவிசாளர் பவி விலகுவதாக அறிவித்தும் அதில் இருந்து தொடர்ந்தும் சேவையாற்றாது இருந்தமையின் பெயரில் பதவி நீக்கும் நிலமைக்கு இட்டுச் சென்றதாக கட்சி தெரிவிக்கப்படுகின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply