மீண்டும் இந்தியா பயணமாகிறார் பசில்

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச மீண்டும் இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளார்.எதிர்வரும் 10ம் திகதி முதல் 12ம் திகதி வரையில் குஜராத்தில் நடைபெறவுள்ள மாநாடு ஒன்றில் நிதி அமைச்சர் பங்கேற்க உள்ளார்.

இந்த விஜயத்தின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. சீன வெளிவிவகார அமைச்சா வேங் யீ இலங்கைக்கான விஜயத்தை முடித்துக் கொண்டதன் பின்னர், பசில் இவ்வாறு இந்தியா விஜயம் செய்ய உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த நவம்பர் மாதம் பசில் ராஜபக்ச இந்தியா விஜயம் செய்திருந்த போதிலும் பிரதமர் நரேந்திர மோடியைச சந்திக்க முடியவில்லை. இந்த நிலையில் பசில் சிறு இடைவெளியில் இரண்டாவது தடவையாகவும் இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply