காஷ்மீரில் சோகம் – மாதா வைஷ்ணவ தேவி பவன் பகுதியருகே கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் பலி

ஜம்மு காஷ்மீரின் கத்ரா நகரில் மாதா வைஷ்ணவ தேவி கோயில் அமைந்துள்ளது. நேற்று நள்ளிரவில் புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு அப்பகுதி மக்கள் அதிக அளவில் கூடினர். அப்போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்த கூட்ட நெரிசலில் சிக்கி பொதுமக்களில் பலர் காயமடைந்துள்ளனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதில் 12 பேர் உயிரிழந்தனர் என்றும் 20க்கும் மேற்பட்டோ காயம் அடைந்துள்ளனர். தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடந்து வருகிறது என ஜம்மு காஷ்மீர் டிஜிபி தில்பாக் சிங் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply