விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு : 3 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் உள்ள குல்ஃபோர்ட் நகரில் புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பலர் கலந்து கொண்ட நிலையில், புத்தாண்டு பிறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு திடீரென சிலர் அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் மூன்று பேர் துப்பாக்கி குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 4 பேர் காயமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
துப்பாக்கி சூடு நடைபெற்ற இடத்தை புலனாய்வு பிரிவினர் ஆய்வு செய்தனர். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட மூன்று பேரின் உடல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. பலத்த காயமடைந்த ஒருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. மற்ற மூன்று பேரும் விரைவில் குணமடைவார்கள் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply