சவுதி அரேபியா மீதான ஆயுத ஏற்றுமதி தடை நீட்டிப்பு: ஜேர்மனி

ஜேர்மன் அரசாங்கம் சவுதி அரேபியா மீதான ஆயுத ஏற்றுமதி தடையை நீட்டித்துள்ளது.சவூதி அரேபியாவிற்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதற்கான தடையை 2022-ஆம் ஆண்டு இறுதி வரை நீட்டிக்க ஜேர்மனியின் புதிய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜேர்மன் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஏமனில் நடந்த போர் மற்றும் சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகியின் கொலை காரணமாக, ஜேர்மனி கடந்த 2018-ல் சவூதி அரேபியாவிற்கு ஆயுத ஏற்றுமதியை நிறுத்தியது.

அதனைத் தொடர்ந்து, ஜேர்மன் அரசாங்கம் சவுதி அரேபியா மீது ஆயுத ஏற்றுமதி தடையை பலமுறை நீட்டித்துள்ளது. அந்த வகையில் இப்போது மீண்டும் ஒருமுறை அடுத்த ஓராண்டுக்கு நீட்டித்துள்ளது.

“ஏமன் போரில் அவர்களின் ஈடுபாடு நிரூபிக்கப்படும் வரை, நாடுகளுக்கு பாதுகாப்புத் துறை ஏற்றுமதிக்கான அனுமதிகளை நாங்கள் வழங்க மாட்டோம் ” என்று பசுமை கட்சியின் தலைமையிலான அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த தடையை கடுமையாக்க ஜேர்மன் அரசாங்கம் ஒரு படி மேலே சென்று, முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அனுமதிகளையும் ரத்து செய்தது.

மற்ற ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் இந்த நடவடிக்கையில் வராது. 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply