பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் முன்னாள் மனைவி கார் மீது துப்பாக்கிசூடு
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் முன்னாள் மனைவி ரெஹாம்கான்.நேற்று இரவு இவர் மருமகனின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த 2 மர்ம மனிதர்கள் காரை துப்பாக்கி முனையில் மறித்தனர். பின்னர் அவர்கள் எனது காரை நோக்கி துப்பாக்கியால்சுட்டு தன்னை மிரட்டியதாக ரெஹாம்கான் குற்றம் சாட்டி உள்ளார். பின்னர் அவர் வேறு காரில் சென்றார்.
அவர்கள் யார்? என்று தெரியவிலலை. எதற்காக பின்தொடர்ந்து வந்தார்கள் என்றும் தெரியவில்லை. இது குறித்து ரெஹாம்கான் கூறும்போது, ‘இது இம்ரான்கான் ஆட்சியின் கீழ் பாகிஸ்தான் கோழைகள், குண்டர்கள் மற்றும் பேராசைகாரர்கள் நாடாக மாறி விட்டது’ என்று கூறினார்.
முன்னாள் தொலைக்காட்சி தொகுப்பாளரும், பத்திரிகையாளருமாக இருந்து வந்த ரெஹாம்கான் கடந்த 2014-ம் ஆண்டு இம்ரான்கானை திருமணம் செய்தார். அடுத்த ஆண்டு அவர்கள் பிரிந்து விட்டனர்.
தற்போது 48 வயதான அவர் தனது முன்னாள் கணவரான பிரதமர் இம்ரான்கானை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply