அமைச்சர்களின் வெளிநாட்டு பயணங்களுக்கு கட்டுப்பாடு

அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் வெளிநாட்டு விஜயங்களை அத்தியாவசியப் பணிகளுக்காக மாத்திரம் மட்டுப்படுத்துவதற்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

தற்போது நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியை கருத்திற் கொண்டு அரச செலவினங்களைக் குறைக்கும் நோக்கில் ஜனாதிபதியினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டதாக அமைச்சரவை ஊடக பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அவ்வாறான சுற்றுப்பயணங்களுக்கு அவசியமான அலுவலர் அல்லது குறித்த சுற்றுப்பயணக் கடமைகளுக்கு அத்தியாவசியமான ஒருசிலரை மாத்திரம் பங்கேற்கச் செய்தல் வேண்டுமென ஜனாதிபதியின் குறித்த யோசனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply