புறக்கோட்டை மொத்த வியாபார நிலையங்களில் அத்தியாவசிய பொருட்கள் பதுக்கல்

எரிபொருள் விலையேற்றத்தை தொடர்ந்து கொழும்பு புறக்கோட்டை மொத்த வியாபார நிலையங்களில் அத்தியாவசிய பொருட்கள் பதுக்கலுடன் அவற்றின் விலைகள் அதிகரிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின்றன. இவ்வாறாகா சீனி, தேங்காய் எண்ணெய் பருப்பு உள்ளிட்ட தானிய வகைகள் பதுக்கப்பட்டு விலையேற்றம் செய்யப்படுவதாக கூறப்படுகின்றது.

குறிப்பாக எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து நேற்றைய தினத்தில் மாத்திரம் ஒரு கிலோ சீனியின் மொத்த விலை 10 முதல் 15 ரூபாவினாலும், ஒரு கிலோ பருப்பின் விலை 20 முதல் 25 ரூபாவினாலும், ஒரு கிலோ தேங்காய் எண்ணெய் விலை 40 முதல் 50 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக புறக்கோட்டை மொத்த வியாபார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை விலை அதிகரிப்பை செய்யும் நோக்கில் அத்தியாவசிய பொருட்களை பதுக்கும் செயற்பாடுகள் இடம்பெறுவதாகவும் கூறப்படுகின்றது.

இந்த விடயம் தொடர்பில் வர்த்தக அமைச்சு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை என்பன கவனம் செலுத்தி, முறையற்ற வகையிலான விலை அதிகரிப்பை தடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply