நாளை ஜப்பான் செல்கிறார் ஜனாதிபதி
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் நினைவு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட இலங்கை தூதுக்குழுவினர் நாளை இரவு ஜப்பான் செல்லவுள்ளனர். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா மற்றும் ஜப்பானிய அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்தும் கலந்துரையாடவுள்ளார்.
ஜப்பானின் நீண்ட காலம் பிரதமராக இருந்த 67 வயதான ஷின்சோ அபே, கடந்த ஜூலை 8ஆம் திகதி இடம்பெற்ற அரசியல் கட்சி பிரச்சாரக் கூட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த நிலையில் ஜப்பானில் கொலை செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபேவுக்கு வருகிற 27-ந்தேதி அரசு சார்பில் நினைவு நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி உள்பட உலக தலைவர்கள் பலரும் கலந்து கொள்ள உள்ளனர். இந்த நிலையில் ஷின்ஜோ அபேவுக்கு அரசு நினைவு நிகழ்ச்சி நடத்துவதற்கு ஜப்பானில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
நினைவு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி நேற்று தலைநகர் டோக்கியோவில் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசை கண்டிக்கும் பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஷின்ஜோ அபேவுக்கு எதிராக கண்டன கோஷங்களையும் எழுப்பினர்.
ஷின்ஜோ அபேயும், அவரது அரசும் குறிப்பிட்ட ஒரு மத அமைப்புடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாக குற்றம் சாட்டி மக்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஷின்ஜோ அபேவுக்கு நினைவு நிகழ்ச்சி நடத்த எதிர்ப்பு தெரிவித்து 70 வயது முதியவர் ஒருவர் டோக்கியோவில் உள்ள பிரதமர் அலுவலகம் அருகே தீக்குளித்தது நினைவுகூரத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply