காங்கோவில் சோகம் அப்பாவி பொதுமக்கள் 17 பேரை கொன்ற கிளர்ச்சியாளர்கள்
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் உள்நாட்டுப்போர் பல ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது. அதேவேளை காங்கோவில் பல்வேறு பயங்கரவாத குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. பயங்கரவாத குழுக்கள் அவ்வப்போது பொதுமக்கள் மீதும் பாதுகாப்புப் படையினர் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்தச் சம்பவங்களில் பலர் உயிரிழந்து வருகின்றனர். பயங்கரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையில் காங்கோ பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், காங்கோவின் கிழக்கில் உள்ள இடுரி மற்றும் ட்ஜிகு மாகாணங்களில் நேற்று பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.
இந்த மாகாணங்களில் சாலையில் சென்றுகொண்டிருந்த வாகனங்களை கிளர்ச்சியாளர்கள் குழு கடத்தியது. இந்த சம்பவத்தில் அந்த வாகனங்களில் பயணம் செய்த டிரைவர் உள்பட பொதுமக்கள் 17 பேர் கிளர்ச்சியாளர்கள் குழுவால் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக பாதுகாப்புப் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தாக்குதல் நடந்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply