இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து : ஒருவர் உயிரிழப்பு

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கஜுகம பகுதியில் நேற்றிரவு (29) இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 9 பேர் காயமடைந்துள்ளனர்.

தனியார் பஸ்ஸொன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இந்த விபத்தில் தனியார் பஸ்ஸின் சாரதியான 44 வயதுடைய நபரே உயிரிழந்ததுடன், இரு பஸ்களில் பயணித்த 9 பேர் காயமடைந்து வத்துபிட்டிவல மற்றும் வரக்காபொல வைத்தியசாலையில்

அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நிட்டம்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply