பிரிட்டிஸ் இளவரசி கேட்மிடில்டனிற்கு புற்றுநோய் : வீடியோ அறிக்கையில் விபரங்களை வெளியிட்டார்

பிரிட்டிஸ் இளவரசி வில்லியம் கேட் மிடில்டன் புற்றுநோயல் பாதிக்கப்பட்டுள்ளார். வீடியோ அறிக்கையொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார் புற்றுநோய் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அதற்கு சிகிச்சை பெற்றுவருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடுமையான பல மாதங்களிற்கு பின்னர் இது மிகவும் அதிர்ச்சியை அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் நான் நன்றாகயிருக்கின்றேன் ஒவ்வொரு நாளும் வலிமை பெற்றுவருகின்றேன் என அவர் தெரிவித்துளளார்.

நோய் பாதிப்பு குறித்த விபரங்கள் முழுமையாக வெளிவராத போதிலும் இளவரசி முழுமையாக குணமடைவார் என கென்சிங்டன் அரண்மணை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

நான் வயிற்றில் சத்திரசிகிச்சை செய்துகொண்டவேளை நான் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருக்கின்றேனா என்ற விபரம் தெரியவரவில்லை ஆனால் சத்திரசிகிச்சைக்கு பிந்திய மருத்துவபரிசோதனைகளின் போது நான் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானது நான் ஹீமோதெரபி சிகிச்சைக்கு என்னை உட்படுத்தவேண்டியுள்ளது சிகிச்சையின் ஆரம்ப கட்டத்தில் உள்ளேன் என கேட் மிடில்டன் தெரிவித்துள்ளார்.

பெப்ரவரியில் சிகிச்சை ஆரம்பமாகியுள்ளது – நோய் சிகிச்சை குறித்த ஏனைய விபரங்களை வெளியிடப்போவதில்லை என கென்சிங்டன்அரண்மணை தெரிவித்துள்ளது.

இந்த வகையான நோயினால் பாதிக்கப்பட்ட அனைவரையும் நான் இந்த தருணத்தில் நினைத்துப்பார்க்கின்றேன் என தெரிவித்துள்ள இளவரசி கேட் (42) இந்த வகை நோயினை அதன் எந்த வடிவத்தில் எதிர்கொள்பவராக நீங்கள் இருந்தாலும் நம்பிக்கை இழக்காதீர்கள் நீங்கள் தனியாக இல்லை எனவும் குறி;ப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply