பிரித்தானியா அறிமுகம் செய்துள்ள புதிய ஆயுதம்: ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் போர் களத்திற்கு அனுப்ப திட்டம்

இராணுவ ஆயுதச் சந்தையில் “DragonFire” என்ற புதிய ஆயுதத்தை பிரித்தானியா அறிமுகம் செய்துள்ளது. இந்த ஆயுதத்தை கடந்த ஜனவரி மாதம் பிரித்தானிய இராணுவ நிபுணர்கள் வெற்றிகரமாக பரிசோதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், ரஷ்ய ஆளில்லா விமானங்களை வீழ்த்த, உயர் சக்தி படைத்த லேசர் ஆயுதமான DragonFireஐ உக்ரைனுக்கு அனுப்ப கூடும் என பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.

சுமார் 140 மில்லியன் டொலர்கள் செலவில் தயாரிக்கப்படும் இந்த ஆயுதம், இலக்கில் சக்திவாய்ந்த லேசர் ஊடாக அழிக்கும் திறன் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரோன் தாக்குதல்களை எதிர்கொள்ள ஏவுகணைகளைப் பயன்படுத்துவதை விட DragonFire ஆயுதத்தை குறைந்த விலையில் பயன்படுத்த முடியும் என பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த ஆயுதத்தை 2032 ஆம் ஆண்டிலேயே வெளியிட தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும், ரஷ்யா-உக்ரைன் போரின் வளர்ச்சியின் பின்னணியில், “DragonFire” ஆயுதத்தை போர்க்களத்திற்கு அனுப்ப வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கிராண்ட் ஷேப்ஸ் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், ஏவுகணைகளைப் போலல்லாமல், இந்த ஆயுதம் ஒற்றை நேரியல் பாதையில் பயணிக்கும் இலக்குகளை மட்டுமே தாக்க முடியும் என்று இராணுவ நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply