ஹமாசின் பிடியிலிருந்த நான்கு பணயக் கைதிகள் இஸ்ரேலியப் படைகளால் மீட்பு

ஒக்டோபர் 7 திகதி ஹமாசினால் கடத்தப்பட்ட பணயக் கைதிகளில் நான்கு பணயக் கைதிகள் இஸ்ரேலியப் படைகள் மீட்டுள்ளனர். இஸ்ரேலியப் படைகள் நடத்திய சிறப்பு நடவடிக்கையில் நோவா ஆர்கமணி (வயது 26), அல்மோக் மீர் ஜான் (வயது 22), ஆண்ட்ரி கோஸ்லோவ் (வயது 27), மற்றும் ஷ்லோமி ஜிவ் (வயது 41), ஆகியோர் அக்டோபர் 7 ஆம் தேதி நோவா இசை விழாவில் இருந்து கடத்தப்பட்டு எட்டு மாதங்களுக்குப் பிறகு நேற்று சனிக்கிழமை விடுவிக்கப்பட்டனர்.

இஸ்ரேலியப் படைகள், வான்வழித் தாக்குதல்களின் ஆதரவுடன், அல்-நுசிராத் அகதிகள் முகாமிலும் மக்களோடு தடுத்து வைக்கப்பட்டிருந்து நான்கு பேரை மீட்டனர்.

இந்த நடவடிக்கையின் போது இஸ்ரேலியப் படைகளின் தாக்குதலில்அகதி முகாமில் 210 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக குழந்தைகள் பெண்கள் என பலர் கொடூரமான தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

காசாவில் உள்ள இரண்டு மருத்துவமனைகள், அல்-அக்ஸா மருத்துவமனை மற்றும் அல்-அவ்தா மருத்துவமனையில் 70 உடல்கள் இருப்பதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

100க்கும் குறைவான உயிரிழப்புகள் ஏற்பட்டதாக இஸ்ரேலின் பாதுகாப்புப் படையினர் செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி தெரிவித்தார்.

இந்த பணியானது துல்லியமான உளவுத்துறையின் அடிப்படையிலானது என்றும், பணயக்கைதிகள் நுசிராட்டில் உள்ள இரண்டு தனித்தனி கட்டிடங்களில் இருந்து விடுவிக்கப்பட்டதாகவும் டேனியல் ஹகாரி கூறினார்.

இந்த நடவடிக்கையின் போது இஸ்ரேலியப் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அவர் கூறினார். காசா பணயக்கைதிகள் மீட்புப் பணியில் சிறப்புப் படை அதிகாரி ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் உயிரிழந்தார் என்று இஸ்ரேல் காவல்துறையினர் தெரிவித்தனர்.

விடுவிக்கப்பட்ட பணயக்கைதிகள் அனைவரும் நலமுடன் இருப்பதாகவும், பின்னர் அவர்கள் டெல் அவிவ் அருகே உள்ள மருத்துவ மையத்தில் குடும்ப உறுப்பினர்களை கட்டித்தழுவுவது போலவும் படம் எடுக்கப்பட்டதாக இஸ்ரேலியப் பாதுகாப்புப் படைகள் கூறியது.

இஸ்ரேலியப் படைகள் ஆக்கப்பூர்வமாகவும் துணிச்சலாகவும் செயல்படுவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாராட்டினார்.

இஸ்ரேலின் பாதுகாப்பு அமைப்பில் 47 ஆண்டுகளாக பணியாற்றிய நான் கண்ட மிகவும் வீரம் மிக்க மற்றும் அசாதாரணமான நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும்” என்று திரு கேலன்ட் கூறினார்.

காசாவில் ஹமாஸுடன் எட்டு மாதங்கள் போருக்குப் பின்னர் இந்த நான்கு பேரும் விடுவிக்கப்பட்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply