கடற்படையால் கடந்த 6 மாதங்களில் 600 KG போதைப்பொருள் மீட்பு

இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதி வரையில் 600 கிலோ கிராம் போதைப்பொருளை கைப்பற்றியுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். 9,460 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

நெடுநாள் படகில் சூட்சுமமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3,250 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 131 கிலோ ஹெரோயின் போதைப்பொருளுடன், 06 சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இந்த போதைப்பொருளை காண்காணிப்பதற்காக காலி துறைமுகத்திற்கு வருகை தந்திருந்த போதே கடற்படை தளபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply