மாடுகளுக்கு பரோட்டா உண்ணக் கொடுத்த உரிமையாளர் : 5 மாடுகள் மரணம்

இந்தியாவின் கேரள மாநிலத்தில் பண்ணை ஒன்றில் அளவுக்கு அதிகமான பரோட்டாவும் பலாப்பழமும் உட்கொண்டதால் 5 மாடுகள் மரணித்துள்ளன. அத்துடன், மேலும் 9 மாடுகளுக்குச் சிகிச்சை அளிக்கப்படுவதாக The Hindustan Times செய்தி செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை (15 ஜூன்) மாடுகளின் உடல்நலம் குன்றியதாக தெரிவிக்கப்படுகிறது. கால்நடைத் தீவனத்தின் விலை உயர்ந்துவிட்டதால், குறித்த பண்ணையின் உரிமையாளர் மாடுகளுக்குப் பரோட்டா, பலாப்பழம் மற்றும் புளியங்கொட்டை ஆகியவற்றைக் கொடுத்ததாக நம்பப்படுகிறது. அதனால் மாடுகளின் உடலில் நீர்ச்சத்துக் குறைந்து அவை மரணித்ததாக கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தையடுத்து கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் பாதிக்கப்பட்ட பண்ணையை நேரில் சென்று பார்வையிட்டார். பண்ணை உரிமையாளருக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply