யாழில் தீக்காயங்களுடன் ஒருவர் மீட்பு
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, வத்திராயன் பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் தீக்காயங்களுடன், பொதுமக்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பவானி என்ற 43 வயதானவர் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு வத்திராயன் பகுதியில் உள்ள தனது வீட்டில் தனியாக உறங்கியுள்ளார்.
இதன்போது தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் வீட்டில் இருந்து வெளியே ஓடிவந்த வேளை பொதுமக்களால் மீட்கப்பட்டு மருதங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவத்திற்கான காரணம் தெரியவராத போதும் முன்பகை காரணமாக பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
மருதங்கேணி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply