குருணாகலில் வனப்பகுதியிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

குருணாகல் பிரதேசத்தில் பொல்பித்திகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வனப்பகுதியொன்றிலிருந்து நேற்று (24) ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொல்பித்திகம பொலிஸார் தெரிவித்தனர்.

பொல்பித்திகம பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய நபரொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் கடந்த ஒரு மாத காலமாகக் காணாமல் போயிருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொல்பித்திகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply